ஈழத்தில் குறிப்பிடத்தக்க அரசியல் ஆய்வாளர்களில் ஒருவராகக் கருதப்படும் திரு.யதீந்திரா அவர்கள் தம்பலகாமம் புதுக்குடியிருபில் 1976.06.07.திகதி பிறந்தவர். தனது ஆரம்பக்கல்வியை குளக்கோட்டன் வித்தியாலயத்திலும் பின்னர் இடப்பெயர்வு காரணமாக ஆலங்கேணி மகா வித்தியாலயத்திலும் கற்று உயர்கல்வியை திருகோணமலை இராமகிருஷ்ண சங்க இந்துக் கல்லூரியில் வர்த்தகப் பிரிவில் க.பொ.த.உயர்தரம்வரை கற்றார்.
இக்காலப் பகுதியில் ‘அரசியல்’ ‘தத்துவம்’ ஆகிய துறைகளில் அதீத ஆற்றல் பெற்றிருந்தார் என்பதைச் சுட்டிக்காட்டுதல் பொருந்தும். சர்வதேச கல்விநிலையங்களில் முரண்பாட்டு, முகாமைத்துவம், சர்வதேச உறவுகள் போன்ற துறைகளில் கற்ற யதீந்திரா தனது முதுமானிக்கல்வியை கம்போடியாவிலுள்ள முன்னணிப் பலகலைக்கழகமான ‘பன்ஸ்ரா’ பல்கலைக்கழகத்தில் முரண்பாடு சர்வதேச உறவுகளைக் கையாளுதல் தொடர்பான கற்கை நெறியில் முதுமானிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.
‘வாசிப்பு ஒரு மனிதனை முழுமையாக்கும்’ என்பார்கள். திருகோணமலை இராமகிருஷ்ண சங்க இந்துக்கல்லூரியில் இவர் கற்கும் பொழுது தீவிர வாசிப்பில் ஈடுபட்டிருந்தார். இயல்பாகவே இலக்கியத்துறையில் இவரது நாட்டம் சென்றது. ஆரம்ப காலத்தில் இடதுசாரி கருத்தியல் மீது ஆர்வம் செலுத்திய இவர் 1997 இல் எழுத்துத் துறையில் பிரவேசித்தார்.
இலக்கிய ரீதியிலான விமர்சனங்கள், சிறுகதை, கவிதை, சினிமா ஆகிய தலைப்புகளில் பல்வேறுவிதமான கட்டுரைகளை எழுதினார். இவை ஞானம், வெளிச்சம் சஞ்சிகைகளிலும், பிரான்சிலிருந்து வெளியாகும் தமிழ் இணையத்திலும் வெளியாகின. இதே காலத்தில் திருகோணமலையில் இடம் பெற்ற கலை இலக்கிய செயற்பாடுகளிலும் போதிய பங்களிப்புச் செய்தார்.
இக்காலத்துப் பிற்பகுதியில் தமிழ் தேசிய கருத்துக்களில் பெரும் செல்வாக்குச் செலுத்திய இராணுவ ஆய்வாளரும் அரசியல் கருத்தியலாளருமான டி.சிவராமின் (தராக்கி) எழுத்துக்களால் பெரிதும் கவரப்பட்டு அரசியல் பக்கம் தன் முழுமையான கவனத்தைச் செலுத்தினார் திரு.யதீந்திரா. இதன் பயனாக 2005ஆம் ஆண்டு அரசியல் பத்தியாய்வாளராக தினக்குரலில் ‘யுத்த நிறுத்தத்தின் எதிர்காலம்?’ என்ற கட்டுரை வாயிலாகக் களமிறங்கினார்.
திரு.யதீந்திராவின் கட்டுரைகள் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் வெளியாகும் தினக்குரலின் விசேட இணைப்பான ‘புதிய பண்பாட்டில்’ வெளிவந்து கொண்டிருக்கின்றன. வீரகேசரி வெளியீடான ‘சமகால அரசியலிலும்’ இவர் தொடர்ச்சியாக எழுதிவருகிறார். ஊடகங்களில் வெளியாகும் இவரது கட்டுரைகள் இங்கிலாந்திலிருந்து வெளியாகும் ‘பொங்கு தமிழிலும்’ பிரான்சிலிருந்து வெளியாகும் ‘புதினப்பலகையிலும்’ கொழும்பிலிருந்து வெளியாகும் ‘மாற்றம்’ ஆகிய இணையத்தளங்களிலும் மறுபிரசுரம் செய்யப்படுகிறது.
கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக நூற்றுக்கும் மேற்பட்ட அரசியல் விமர்சனக் கட்டுரைகளை எழுதியிருக்கும் திரு.யதீந்திரா தனது எழுத்துகளுக்காக பல்வேறு விமர்சனங்களையும் எதிர் கொண்டு வருகிறார் என்பதை இங்கே சுட்டிக் காட்டுதல் அவசியமாகிறது. தமிழ் நாட்டில் வெளிவரும் முன்னணி சஞ்சிகையான ‘காலச் சுவட்டில் 2012 இல் இவர் எழுதிய ‘ இந்தியா புலிகளை அழித்ததா?’ ‘நோர்வே அறிக்கையை முன்னிறுத்தி ஒரு மதிப்பீடு’ ‘துரோகி’ ‘ஈழ அரசியலின் ஒரு பூமராங்’ போன்ற கட்டுரைகள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தன.
இவர் எழுதிய இலக்கிய தத்துவார்த்த கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பொன்று ‘காலத்துயரும் காலத்தின் சாட்சியும்’ என்ற தலைப்பில் 2010 இல் இந்தியாவில் ‘சாரளம்’ வெளியீடாக வெளிவந்துள்ளது. பெரும்பாலும் இணையத்தளங்களிலும் அம்பலம், தினக்குரல் போன்ற இதழ்களிலும் பிரசுரமாகிய கட்டுரைகள் இதில் அடங்கியுள்ளன. ‘ஏற்றதொரு கருத்தெனின் அதை எடுத்துச் சொல்ல எந்த ஒரு தயக்கமும் இல்லாதவர் யதீந்திரா’ என்பதற்கான அடையாளங்கள் இந்நூலில் காணப்படுகின்றன. இதன் காரணமாக பலரதும் விமர்சனங்களுக்கு இவர் உள்ளாகியுள்ளார் என்பதும் உண்மையே.
திருகோணமலையில் இன்றைய சூழலில் இலங்கை, தமிழ்நாடு, மற்றும் புலம்பெயர் சூழல் என்ற மூன்று தளங்களிலும் பத்திரிகையாளனாக, அரசியல் ஆய்வாளனாக, எழுத்தாளனாகப் பேசப்படும் திரு.யதீந்திரா என்ற கலைஞனை இலங்கை ‘கம்பன் கழகத்தினர்’ 2013 ஆம் ஆண்டில் ‘ஏற்றமிகு இளைஞன்’ என்ற விருது வழங்கிக் கௌரவித்தனர்.
இதுவரை 300 கும் மேற்பட்ட அரசியல் கட்டுரைகளை எழுதியிருக்கும் இவர் திருகோணமலையில் ‘சமூக அபிவிருத்தி ஆய்வு நிலையம்’ என்ற பெயரில் அரசுசாரா நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இதன் மூலம் ‘மனித உரிமை’ மற்றும் ‘சிவில் சமூக வலுவூட்டல்’ போன்ற சமூகப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

வேலாயுதம் தங்கராசா.
இவரை போன்றவர்கள் பாடசாலையில் படிக்கும் பொழுது பெரிதாக கவனிககப்டிவது இல்லை. காரணம் எமது கல்விமுறை. எங்கள் கல்வி, பாட விததானங்களில் சிறந்து விளங்குபவர்களை மட்டுமே பாராட்டும். அரசியல்,கலை, ஸ்போர்ட்ஸ் போன்ற துறைகளில் ஆர்வம் உள்ளவர்களை கண்டுகொள்வதேயில்லை. அப்படிஉம் ஆர்வம் உள்ளவர்கள் கட்டயத்தில் ஒரு துறையில் படித்து பட்டம் பெற்று ஒரு தொழிலையும் பெற்று அதன் பின்னரே தங்களுக்கு பிடித்த துறையில் எடுபட முடிகிறது , அதுவும் எத்தனை பேருக்கு நேரம் கிடைக்கும். எங்கள் பாடசாலையில் maths , science படிபவர்களை ஒருமதிரிஉம் Commerse , Arts படிபவர்களை இன்னொரு மாதிரியும் பார்ப்பது இன்னமும் இருக்கோ தெரியாது !
ReplyDeleteஎங்கள் கல்வி முறை மாற்றப்பட்டு அரசியல் . கலை எழுத்து , பத்திரிகை போன்றவட்டுக்கும் முக்கியம் கொடுப்பது மட்டும் அல்லது அந்த துறையில் ஈடுபடுபவர்களையும் மதிக்கின்ற ஒரு சமுகம் ஒருவாக வேண்டும்
அதற்கு இவரை போன்றவர்கள் ஒரு example
நன்றி ஜீவராஜ் இதை போன்ற பதிவுகளுக்கு
Dear Dr
ReplyDeleteI have read the articles and heard the speeches of Jatheenthira. But I do not have the idea that he is a student of Alankerny M.V. I was the principal of Alankerny and I was promoted as S.L.E.A.S Officer to Vauniya from 1983. It is a pleasure to hear that he has studied in Alankerny..
Vasan has noted a very good point draw back of our the education of our country.
Kernipiththan
மிக்க நன்றி தங்கள் கருத்துரைகளுக்கு.
ReplyDelete