Wednesday, June 11, 2014

தம்பலகாமத்தின் கலை, இலக்கியப் பாரம்பரியம் - ஆவணப்படுத்தலுக்கான முன்னகர்வு

Thampalakamam


ஒரு இனம் அல்லது சமூகம் தனது இருப்பை உறுதிசெய்யவும், அதனது செழிப்பான எதிர்காலத்தை உருவாக்கவும் தனது வரலாறு, கலை,இலக்கியப் பாரம்பரியங்களை பாதுகாத்து ஆவணப்படுத்தி பரவலாக்கம் செய்வது அவசியமாகிறது.
அந்தவகையில் ஈழத்தமிழரின்  புராதனமான மரபுகளைக் கொண்டுள்ள தம்பலகாமப்பற்றின் கலை, இலக்கியப் பாரம்பரியம் தொடர்பிலான திரு.வேலாயுதம் தங்கராசா அவர்களின் இரண்டு வருட தேடலின் வெளிப்பாடுகள் இவை. ஆவணப்படுத்தலின் தேவை அதிகரித்திருக்கும் இக்காலகட்டத்தில் இதனை ஒரு ஆரம்பமுயற்சியாகக் கொள்ளலாம்.

தம்பலகாமத்தின் கலை இலக்கியப் பாரம்பரியம் 

01. முதுபெரும் கவிஞன் வீரக்கோன் முதலியார்
02. கந்தப்பர் கணபதிப்பிள்ளை அண்ணாவியார்
03. திரு.வேலுப்பிள்ளை அண்ணாவியார்
04. அண்ணாவியார் திரு.வடிவேல் சிவப்பிரகாசம்
05. காளியப்பு முருகுப்பிள்ளை அண்ணாவியார்
06. பண்டிதர் ஐயாத்துரை சரவணமுத்து
07. பல்துறை கலைஞராக விளங்கிய தம்பலகாமம்.க.வேலாயுதம்
08. முறிவு வைத்தியர் கந்தன் இளையக்குட்டி பேச்சிமுத்து
09. இசைமணி திரு.க.சண்முகலிங்கம்
10. கலாபூசணம் ‘லய ஞான மணி’ திரு.கோ.சண்முகராசா
11. சங்கீத பூசணம் திரு.வல்லிபுரம் சோமசுந்தரம்
12. தமிழ்த்துறைப் பேராசிரியர் அமரர் கலாநிதி திரு.எஸ்.சத்தியமூர்த்தி
13. மிருதங்க, டோல்க்கி கலைஞர் திரு.ந. குழந்தைவடிவேல்
14. ஆர்மோனியக் கலைஞர் திரு.சி.கனகரத்தினம்
15. பல்துறை கலைஞராக விளங்கிய திரு.வே.மகாலிங்கம்
16. கர்நாடக சங்கீத கலைஞர் திரு.கணபதிப்பிள்ளை மகாலிங்கம்
17. மெல்லிசைக் கலைஞர் திரு.கனகரத்தினம் (இ)லிங்கராசா
18. நாடகக் கலைஞர் திரு.மாசிலாமணி திசவீரசிங்கம்
19. எழுத்தாளர் திரு.முத்துக்குமாரு சிவபாலபிள்ளை
20. சிற்பக்கலைஞர் திரு.கந்தையா கிருபானந்தன்
21. நாடகக் கலைஞர்  திருமதி.பாலசாமுண்டேஸ்வரி  கௌரிதரன்.
22. சண் இசைக்குழுவின் ஸ்தாபகர் திரு.சண்முகலிங்கம் முருகதாஸ்
23.   அரசியல் ஆய்வாளர் திரு.யதீந்திரா
24     எழுத்தாளர் திருமதி காயத்ரி நளினகாந்தன்.
25. சிறுகதை  எழுத்தாளர்  திரு.இ.மதன்
26.    சிறுகதை  எழுத்தாளர்   திருமதி முகுந்தன் கவிதா.
27. பல்துறைக் கலைஞன்  பூபாலசிங்கம்  பிரதீபன்.
28.     வைத்திய கலாநிதி த.ஜீவராஜ்
29. சூரியன் FM அறிவிப்பாளர்  திரு.தில்லையம்பலம் தரணீதரன்
30. குறும்பட இயக்குனர் பல்துறைக் கலைஞர் திரு.யோகராசா சுஜீதன்
31. இளங்கவிஞன் கணேசபிள்ளை சுமன்
32.    எனது ஞாபகமீட்டல் - வேலாயுதம் தங்கராசா

இவை www.geevanathy.com இல் தொடர்ச்சியாக வெளிவந்தபோது படித்துச் சுவைத்து உற்சாகமூட்டிய அனைத்து நட்புள்ளங்களுக்கும் எமது நன்றிகள்.

தம்பலகாமத்தினைச் சேர்ந்த கலை, இலக்கியப் பாரம்பரியத்தில் இங்கு யாரேனும் தவறவிடப்பட்டிருந்தால் அறியத்தந்து உதவுங்கள். உங்கள் உதவி  தம்பலகாமத்தின் கலை இலக்கியப் பாரம்பரியம் தொடர்பிலான ஆவணப்படுத்தலுக்கான முன்னகர்வை முழுமைப்படுத்த உதவும்.

நட்புடன் ஜீவன்.
தொடர்புகொள்ள         admin@geevanathy.com    

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment:

  1. Dear Dr
    Go ahead. Tanks a lot. Convey my best to Thanka
    Kernipiththan

    ReplyDelete