திருகோணமலைக்கும் தம்பலகாமத்திற்கும் மத்தியில் கப்பல்துறைக் கிராமம் அமைந்துள்ளது. திருகோணமலையில் மிகவும் பின்தங்கியதும், யுத்தத்தால் பலமுறை முழுமையாகப் பாதிக்கப்பட்டதுமான கிராமங்களில் இக்கிராமமும் ஒன்றாகும்.
“பட்டிகள் கட்டியதால் பட்டிமேடு” என கவிஞர் க.வேலாயுதம் அவர்களால் சிறப்பித்துப் பாடப்பெற்ற பட்டிமேட்டில் ‘வைராவியார்’ குடும்பத்தைச் சார்ந்த திருஞானசம்பந்த மூர்த்தி அவர்களுக்கும், அவரது மனைவி ஞானசோதி அம்மையாருக்கும் இரண்டாவது மகளாகப் பிறந்தவர்தான் நமது தம்பலகாமத்தின் பெண் எழுத்தாளர்களில் ஒருவரான திருமதி.காயத்ரி நளினகாந்தன் அவர்கள்.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு.வன்னியசிங்கம் அவர்களின் மறைவுக்காகப் எழுதப்பட்ட இக்கவிதையூடாக அமரர் திரு.க.வேலாயுதம் அவர்கள் எழுத்துலகில் பிரவேசித்தார்.
திருகோணமலையின் கலை, இலக்கிய பாரம்பரியம் பற்றிய ஆய்வுகளும் அவற்றின் வரலாற்றாதாரங்கள் பற்றிய தேடல்களும் அதிகரித்திருக்கும் இக்காலகட்டத்தில் திருகோணமலையிலுள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற கிராமங்களில் ஒன்றான தம்பலகாமத்தில் இன்று முற்றும் முழுதாக மறக்கப்பட்டுவிட்ட அண்ணாவிமார்களின் காலத்தினை மீட்டுப் பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.