இடம். தி/சாரதா வித்தியாலயம்.
பட்டிமேடு
தம்பலகாமம்.
காலம். 25.03.2014. செவ்வாய்க்கிழமை
நேரம். பிற்பகல் 2.00.
தம்பலகாமம் பட்டிமேடு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் மேற்படி கௌரவிப்பு விழா விழாத்தலைவர் திரு.சுப்ரமணியம் பரமேஸ்வரன் அவர்கள் தலைமையில் வெகுசிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சி நிரலில் குறித்த பிரகாரம் வித்தியாலய வாசலில் வைத்து பிரதேசச் செயலாளர் திருமதி.ஜெயகௌரி ஸ்ரீபதி அவர்களும் விருந்தினர்கள் அனைவரும் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர்.
அதனை அடுத்து ‘ஒளியேற்றலும்’ இறைவணக்கமும் இடம்பெற பட்டிமேட்டு கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் திரு.சு.பரமேஸ்கரன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் வாழும்போது வாழ்த்தும் நல்ல பழக்கத்தை நாம் பழகிக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில் பிரதமகுரு. சிவசிறி வெங்கடேஸ்வரக் குருக்கள் ஆசியுரையுடன் நிகழ்ச்சிகள் களைகட்டின. தம்பலகாமம் ஆதிகோணேஸ்வரா மகாவித்தியாலய அதிபர் திரு.வே.தவராஜா அவர்கள் நிகழ்ச்சி ஒழுங்குகளை மேற்கொண்டார். அவரது குரலினிமையும் நிகழ்ச்சி ஒழுங்கமைப்பும் பார்வையாளர்கள் கவனத்தை வெகுவாகக் கவர்ந்தன.
இதனைத் தொடர்ந்து தி தம்பலகாமம் ஆதிகோணேஸ்வரா மகா வித்தியாலய மாணவிகளின் நடனமும், குழு இசையும், தி/குளக்கோட்டன் வித்தியாலய மாணவிகளின் நடனமும் இடம் பெற்றன. செல்வி பங்குணராஜா ரேணுகா கவிதை பாட, செல்வி அருளானந்தம் நிலுக்ஷி ,செல்வி கைலைநாதன், ஷாருஜா, செல்வன் சுரேஸ் சந்தோஸ் ஆகிய மாணாக்கர்கள் உரையாற்றினர்.
இதனைத் தொடர்ந்து விருந்தினர்களின் சிறப்புரைகள் இடம் பெற்றன. திரு.ந..விஜேந்திரன் திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளர். முன்னாள் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.கு.திலகரெத்தினம், தம்பலகாமம் கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.சீ.மதியழகன், வைத்திய அதிகாரி திரு.வே.விக்னராஜா, திருகோணமலை ஆரம்பப்பிரிவு உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு.சு.கணேசலிங்கம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அனைவரும் தம்பலகாமம் பிரதேசச் செயலாளர் திருமதி.ஜெயகௌரி ஸ்ரீபதியின் கல்விச் சிறப்பையும், ஆற்றலையும் பெரிதும் பாராட்டினர். இந்த நிலைக்கு அவரை உயர்த்திய பெற்றோரையும் புகழ்ந்துரைத்தனர்.
இதனைத் தொடர்ந்து தம்பலகாமம் பிரதேசச் செயலாளர் திருமதி.ஜெயகௌரி ஸ்ரீபதியை கௌரவிக்கும் நிகழ்ச்சி இடம் பெற்றது. பட்டிமேட்டைச் சேர்ந்த மூதாட்டி திருமதி சுப்ரமணியம் திலகவதி அவர்கள் பொன்னாடை போர்க்க, தி.சாரதா வித்தியாலய அதிபர் திருமதி .யோ.உதயகுமார் அவர்கள் மாலை அணிவிக்க, கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர்.திரு.சு.பரமேஸ்வரன் அவர்கள் வாழ்த்து மடலை பிரதேசச் செயலருக்கு வழங்கினார். முன்னாள் அதிபர் திரு.புவனேந்திரன் அவர்கள் வாழ்த்துப் பாவைப் பாடினார்.
திருமதி. ஜெயகௌரி ஸ்ரீபதி அவர்களின் ஏற்புரையுரையை அடுத்து பட்டிமேடு கிராம அபிவிருத்திச் சங்க உபதலைவர் திரு.சு.பாஸ்கரலிங்கம் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் இனிதுற முடிவுற்றன.
வேலாயுதம் தங்கராசா.

புகைப்படங்கள் - வேலாயுதம் தங்கராசா, சிங்காரவேலு சசிக்குமார்
Dear Dr
ReplyDeleteThe only person who loved his daughter in law was not there to grace the occasion. I was very happy to see my sister Jeeva and her husband Thanka. TIt is very attractive to see the D.S with large beautiful garland. Ask her to ride push cycle to office.
Thanks to Thanka and Jeeva. to have such clever children. May God bless thanka. Jeeva and their children. Please convey my regards.
Kernipiththan.
மிக்க நன்றி தங்கள் கருத்துரைகளுக்கு.
ReplyDelete