இலங்கையில் ஐந்து இரதங்களைக் கொண்டுள்ள மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கண்டியில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவில் மாத்தளை நகரப் பகுதியின் நடுவே அமைந்துள்ளது. இலங்கையில் மிகவுயரமான 108 அடி உயரமான இராஜகோபுரம் அமைந்துள்ள இவ்வாலயத்தில் கொடியேற்றத்தை அடுத்து இரதோற்சவம் 21ஆம் நாள் அன்று நடைபெறும். இரதோற்சவம் அன்று முருகன், சிவன் - அம்பாள், ஸ்ரீ கணேசன் (பிள்ளையார்), சண்டேஸ்வரி மற்றும் மாரியம்மன் ஆகியோர் இரத பவனி வருவார்கள். இரதபவனியானது கோயிலில் இருந்து ஆரம்பித்து வீதியூடாக நடைபெறும். இவ்வாலயத்தின் வருடாந்த உற்சவத்தின் மிகச்சிறப்பு வாய்ந்த விழாவாக பஞ்சரத பவனி இடம்பெறும்.
ஆன்மீகப் பணியுடன் நின்றுவிடாது கடந்த பல வருடங்களாக சமூக சேவையுயிலும் மிகுந்த கரிசனை காட்டிவரும் இவ்வாலயத்தில் மகாசிவராத்திரி, பங்குனி உத்தரம், வைகாசி விசாகம், ஆனி உத்தரம், ஆவணிக் கார்த்திகை, புரட்டாதி மாத சனீஸ்வர மகாயாகம், ஐப்பசி கந்தசஷ்டி உற்சவ சூரசம்ஹாரம், திருக்கார்த்திகை, மார்கழி மாத பிள்ளையார் பெருங்கதை, நவராத்திரி பூஜை, இலட்சார்ச்சனை, கேதார கெளரி சிறப்பு பூஜை, மார்கழி திருவெம்பாவை என்பன சிறப்பாக நடைபெற்று வருவது குறிபிடத்தக்கது.
த.ஜீவராஜ்
வணக்கம்
ReplyDeleteஐயா.
பார்த்து 10வருடங்கள் தங்களின் பதிவு வழி பார்ப்பதில்மிக்க மகிழ்ச்சி..ஐயா.பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி தங்கள் கருத்துரைகளுக்கு.
ReplyDelete