கோணேஸ்வர ஆலய பரிபாலன சபைச் செயலாளர் திரு.கணபதிப்பிள்ளை அருள்சுப்பிரமணியம் அவர்கள் ‘நூல் அறிமுகவுரையை” ஆற்றினார்.
இதனைத் தொடர்ந்து நூல் வெளியீடு திருகோணமலை உயர்நீதி மன்ற நீதிபதி கௌரவ மாணிக்கம் இளஞ்செழியன் அவர்கள் தலைமையில் சிறப்பாக இடம் பெற்றது.
1000 பக்கங்களில் விரிவடையும் இந்நூல் ஆலயம் சார்ந்த தோத்திரங்கள், புராணங்கள், வரலாறு, வரலாற்று ஆய்வுகள், புனருத்தாரணம், நிர்வாகம், பத்திரிகைச் செய்திகள், கட்டுரைகள், கவிதைகள், நிழற்படங்கள் என பல்வேறு பகுதிகளை உள்ளடக்கிய தொகுப்பாகும்.
முதற்பிரதியை அகில இலங்கை இந்து மாமன்றப் பொதுச் செயலாளர் திரு.முத்தையா கதிர்காமநாதன் அவர்களும் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேசச் செயலாளர் திருமதி.சசிதேவி ஜலதீபன் அவர்களும் திரு.வேதநாயகம் வரதசுந்தரம், திரு.இராசையா ஸ்ரீதரன் ஆகியோர்களும் பெற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து மட்டக்களப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வரலாற்று ஆய்வாளருமாகிய செல்வி கதிர்காமநாதன் தங்கேஸ்வரி அவர்கள் கருத்துரை வழங்கினார்.
பெருந்திரளான மக்கள் இந்நூல் வெளியீட்டு விழாவுக்குச் சமூகமளித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து
கல்விச் சமூகப்பணிச் சபையின்
அறக்கட்டளை நிதியுதவி வழங்கும் வைபவம் இடம் பெற்றது.
42 பயனாளிகளுக்கு பிரதம அதிதிகள் நிதியுதவியினை வழங்கி வைத்தார்கள்.
திருகோணமலை கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையின் தம்பலகாமப்பற்று நம்பிக்கைப் பொறுப்பாளர் திரு.நாகமணி திவாகரன் அவர்களின் நன்றியுரையுடன் இனிதுற முடிவுற்றன நிகழ்வுகள்.
'முன்னே குளக்கோட்டன் மூட்டிய திருப்பணிகள்....'
கொடிதெனக் கதறுங் குரைகடல் சூழ்ந்து கொள்ளமு னித்திலஞ் சுமந்து
குடிதனை நெருங்கிப் பெருக்கமாய்த் தோன்றுங் கோணமா மலையமர்ந்தாரே.
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....
It was an amazing event. Everyone should buy and read the book. Its really wonderful work of Arulsubrumaniyam and his colleagues. I was in the last row and bought a copy and read some of its contents. I think our people have difficult to understand the verses. Even I found rather difficult to separate the words to understand the meaning. The credit goes to 'The Koneswara aalaya paripalana sabai . They utilized the money for our younger generation. We all get together and praise them & pray for them
ReplyDeleteKernipiththan
மிக்க நன்றி தங்கள் கருத்துரைக்கு.
ReplyDelete