Tuesday, February 11, 2014

'திருக்கோணேஸ்வரம்' - நூல் வெளியீட்டு விழா - புகைப்படங்கள் 1

திருக்கோணேஸ்வரம்

வரலாற்றுப் பெருமைமிக்க திருக்கோணேஸ்வரம் சார்ந்து இதுவரை வெளிவந்த வரலாறு உள்ளிட்ட ஆன்மிக, இலக்கியங்களின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவும், கல்விக்கான மூன்றாம் கட்ட நிதியுதவி வழங்கும் வைபவமும். 09.02.2014.


திருகோணமலை கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையினரின் ‘திருக்கோணேஸ்வரம்’ நூல் வெளியீடு 09.02.2014 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணியளவில் திருகோணமலை இ.கி.ச.ஸ்ரீ. கோணேஸ்வரா இந்துக்கல்லூரி கேட்போர் கூடத்தில் திருகோணமலை கோணேஸ்வர ஆலய பரிபாலன சபைத் தலைவர் திரு.பரஞ்சோதிப்பிள்ளை பரமேஸ்வரன் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

கோணேஸ்வரப் பெருமான் ஆலயத்திலிருந்து எடுத்துவரப்பட்ட ‘திருக்கோணேஸ்வரம்’ நூல் ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஆலய முன்றலில் பிரதம அதிதிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கிருந்து இந்துக்கல்லாரி மண்டபத்திற்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்ட காட்சி கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது.

திருக்கோணேஸ்வரம்
திருக்கோணேஸ்வரம்
திருக்கோணேஸ்வரம்
திருக்கோணேஸ்வரம்
திருக்கோணேஸ்வரம்

கல்லூரி வாயிலில் பிரதம அதிதிகள் கோலாகலமாக வரவேற்கப்பட்டனர். 

திருக்கோணேஸ்வரம்
திருக்கோணேஸ்வரம்
திருக்கோணேஸ்வரம்
திருக்கோணேஸ்வரம்

தொடர்ந்து இறைவணக்கத்தை திருமதி.பத்மலோஜினி குணராசசிங்கம் அவர்களும் 

திருக்கோணேஸ்வரம்

 வரவேற்பு நடனத்தை ‘கலைக்கோயில்’ நடனாலயமும் நிகழ்த்த 

திருக்கோணேஸ்வரம்

திருக்கோணேஸ்வர ஆலய பரிபாலனசபைத் தலைவர் திரு.பரஞ்சோதிப்பிள்ளை பரமேஸ்வரன் அவர்கள் வரவேற்புரையை நிகழ்தினார்.

திருக்கோணேஸ்வரம்

தொடர்ந்து ஆசியுரைகள் இடம் பெற்றன.
கோணேஸ்வர ஆலய பிரதம குரு சிவஸ்ரீ.மு.சண்முகரத்தினம் அவர்களும்

திருக்கோணேஸ்வரம்

ஸ்ரீபத்ரகாளி அம்பாள் ஆலய பிரதமகுரு வேதாகமமாமணி பிரம்மஸ்ரீ சோ.ரவிச்சந்திரக் குருக்கள் அவர்களும், தொண்டர் ஐயா ஆவர்களும் ஆசியுரைகளை வழங்கினர்.

 கொழும்பு இராம கிருஷ்ண மிசன் தலைவர் சுவாமி சர்வரூபானந்தாஜி அவர்களும் 

திருக்கோணேஸ்வரம்

இலங்கை சின்மயா மிஷனின் திருகோணமலை வதிவிட ஆச்சாரியார் பிரம்மசாரினி மஹிமா சைதன்யா அவர்களும் 

திருக்கோணேஸ்வரம்

திருகோணமலை நகரபிதா திரு.கந்தசாமி செல்வராசா அவர்களும் 

திருக்கோணேஸ்வரம்

நிகழ்ச்சித் தொகுப்பு
கோணேஸ்வர ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள்


திருக்கோணேஸ்வரம்

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment