மானாங்கேணிக் கல்வெட்டும் புராதானச் சின்னங்களான நந்தியும் ஆவுடையாரும் சுமார் 1000 வருடங்களுக்குப் பிறகும் நாம் இலகுவில் காணக்கூடியதாக திருகோணமலை நகரமத்தியில் அமைந்திருக்கும் வெள்ளை வில்வபத்திர கோணநாயகர் ஆலயத்தில் இன்றும் இருப்பது பற்றி பார்த்திருந்தோம். சோழ இலங்கேஸ்வரனும், மச்சகேஸ்வரமும் - புகைப்படங்கள் இனி
அகத்தியர் சப்தரிஷிகளில் ஒருவராகவும், சித்தர்களில் முதன்மையானவராகவும் தமிழுக்கான முனிவர் என்றும், சித்த மருத்துவமுறைகளை வழங்கிய முனிவர் என்றும் குறிப்பிடப்படுகிறார்.
ஈழமான மும்முடிச் சோழ மண்டலத்தில் இருந்த ஒன்பது வளநாடுகளில் ஒன்றுதான் திருகோணமலையைச் சேர்ந்த இராஜேந்திர சோழவளநாடு. திருகோணமலை நகரமும் ,கந்தளாயும் உள்ளடங்கிய பகுதியான இது மும்முடிச் சோழ வளநாடு, இராஜவிச்சாதிர வளநாடு என்ற பெயர்களாலும் அழைக்கப்பட்டது.
சோழர்காலத் திருகோணமலையில் இருந்த வளநாடுகள் பற்றி திருகோணமலையிற் சோழர்கள் - பகுதி - 1இல் பார்த்திருந்தோம்.