அவர் இருக்கும் வீட்டின் வளவு முழுவதும் பொம்மைகளால் நிறைந்திருக்கிறது. ஓய்வுபெற்ற ஆசிரியரான இவர் ஒரு இந்து மதகுரு. சிறுவயதில் இருந்தே கோவில்களில் காணப்படும் சிற்பங்களில் மனதைப் பறிகொடுத்து களிமண்களில் உருவங்களைச் செய்து பழகியதாக குறிப்பிடுகிறார் இவர் . அதன் பின்னர் 1963 இல் திருக்கோனேஸ்வரத்திலும், 1970 இல் பேராதனை குறிஞ்சிக் குமரன் ஆலயத்திலும் சிற்பி திரு.நாகலிங்கம் அவர்களிடம் நேரடியாகக் சிற்பநுணுக்கங்களைக் கற்றுக்கொண்டதாக கூறுகிறார்.
திருகோணமலைப் பாடசாலைகளில் பலவற்றில் இருக்கும் சரஸ்வதிச் சிலைகளுக்குச் சொந்தக்காரரான இவரது வீட்டில் நூற்றுக்கணக்கான சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சிவன்,அம்பாள்,சிவலிங்கம், நவக்கிரகம்,நந்தி,முருகன்,வள்ளி,தெய்வானை,மகாவிஷ்ணு, பூதகணங்கள்,சிம்மம்,யானை,குதிரை,அபிராமிப்பட்டர்,வள்ளுவர், விவேகானந்தர் என்று நீண்டு செல்கிறது அந்த வரிசை.
பெரும்பாலும் இந்துமதத்தைச் சார்ந்த இவரது சிலைகள் இலங்கையின் பல பாகங்களிலும் உள்ள ஆலயங்களிலும், அறநெறிப் பாடசாலைகளிலும் அலங்கரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி , உவர்மலை விவேகாநந்தா கல்லூரி என்பவற்றில் உள்ள ஏழு அடி உயரமான விபுலாநந்தர் சிலைகளும், ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் உள்ள ஏழு அடி கொண்ட தங்கம்மா அவர்களின் சிலையும் இவரது கைவண்ணத்திற்குச் சான்றாக அமைந்தவையாகும்.
சுமார் 60 வருடங்களுக்கு மேலாக சிற்பத்துறையில் ஈடுபட்டுவரும் இவரது சிற்பங்கள் பலமுறை திருகோணமலை நகரமண்டபத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. 1992 இல் இவ்வாறு காட்சிக்கு வைக்கப்பட்ட நான்கு சிலைகள் தெரிவுசெய்யப்பட்டு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் காட்சிப்படுத்தப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
2011 இல் திருகோணமலை பிரதேச சாகித்திய விழாவிலும், 2012 இல் கிழக்கு மாகணசபையின் விழாவிலும் திரு.பிரம்மஸ்ரீ மு.பத்மநாப சர்மா ஐயா அவர்கள் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார். அத்துடன் மேலும் பல விருதுகளுக்குச் சொந்தக்காரரான இவர் தனது 76 வது வயதிலும் சிற்பப்பணியினைத் தொடர்வது குறிப்பிடத்தக்கது.
த.ஜீவராஜ்
தெய்வீக படைப்பாளியை உங்கள் வலைத்தளமூடாக உலகிற்கு காட்டியமைக்கு நன்றி.
ReplyDeleteதெய்வீக கலைஞரை உலகிற்கு உங்கள் வலைத்தளமூடாக காட்டியமைக்கு நன்றி.
ReplyDeleteஅழகிய சிற்பப் புகைப்படங்களுடன் சிற்பி பற்றிய தகவலும் அருமை
ReplyDeleteநன்றி
அருமையான தகவல். நன்றி ஜீவன்.
ReplyDelete