Thursday, November 28, 2013

திருகோணமலையிற் சோழர்கள் - பகுதி - 1

இராஜராஜ சோழனின் சிலை ( பிரகதீஸ்வரர் கோவில்)

முதலாம் இராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்திகளில் ஒன்று '' கொல்லமும், கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும்...''  என்று சோழர் ஆட்சியில் ஒன்பது மண்டலங்களாகப் பிரிக்கப்பட்ட இடங்களில் இலங்கை  ஈழமான மும்முடிச் சோழ மண்டலம் என்ற பிரிவில் அடங்கி இருந்ததைக் குறிப்பிடுகிறது.

Thursday, November 21, 2013

கர்மயோகி அமரர் நாகராஜா கணபதிப்பிள்ளை

நாகராஜா கணபதிப்பிள்ளை

மிக எளிமையான தோற்றம், அன்புகனிந்த வார்த்தைகள், ஆன்மீகச் சிந்தனையால் பண்பட்ட உள்ளம், கர்மயோகிகளின் சலியாத உழைப்பு என உயர்ந்த மதிப்பீட்டில் நம் மத்தியில் வாழ்ந்த நண்பர் நாகராஜா கணபதிப்பிள்ளை அவர்கள் இன்றில்லை என்ற செய்தியை ஏற்க மனம் மறுக்கின்றது. மனதைக் கனக்கச் செய்யும் அவரது பிரிவு ஏற்படுத்தியிருக்கும் வெற்றிடம் மிக விசாலமானது. அவருடைய தேவை என்றும் வேண்டும் என எண்ணிக்கொள்ளும் வகையில் அவருடைய நட்பு இருந்தது. 1970களின் பின்னர் திருகோணமலையை அடையாளப்படுத்திய மிக முக்கிய முகவரிகளில் அவரும் ஒருவராக இருந்தார்.

திருக்கோணேஸ்வரத்தின் தொன்மை - ( புகைப்படங்கள், ஓவியங்கள் உதவியுடன் )

koneswaram

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே சிவபூமியாக விளங்கிய ஈழத்தின் பஞ்ச ஈஸ்வரங்கள்
கிழக்கே                    திருக்கோணேஸ்வரம்
வடமேற்கே            திருக்கேதீஸ்வரம்
வடக்கே                   நகுலேஸ்வரம்
மேற்கே                   முனீஸ்வரம்
தென்கிழக்கே        தொண்டீஸ்வரம்
என்பனவாகும்.

Tuesday, November 12, 2013

‘விஸ்வாமித்திரர்’ என்று மக்களால் செல்லமாக அழைக்கப்பட்ட திரு.வேலுப்பிள்ளை அண்ணாவியார்

விஸ்வாமித்திரர்’

எண்ணூறு வருடகால வரலாற்றுப்புகழ்மிக்க தம்பலகாமத்தில் ‘நாயன்மார்திடல்’ குளக்கோட்டு மாமன்னன் காலத்திலிருந்து பெரிதும் பேசப்பட்ட இடமாகும். குளக்கோட்டனால் சிறப்பாக உருவாக்கப்பட்ட அருவ வழிபாட்டுத் தலங்களில் மிகவும் முக்கியத்தவம் வாய்ந்த ‘நாயன்மார் வேள்வி வளாகம்’ இத்திடலில் தம்பலகாமம் கிண்ணியா பிரதான வீதியில் அமைந்துள்ளது. இதன் காரணமாகவே இத்திடல் ‘நாயன்மார்திடல்’ என அழைக்கப்பட்டு வருகிறது. இந்த வேள்வி வளாகத்திற்கான காணியை தென்னமரவடியைச் சேர்ந்த திரு.நமச்சிவாயம் என்னும் பெரியார் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளமையும் இங்கே குறிப்பிட வேண்டிய ஓர் அம்சமாகும்.

Friday, November 08, 2013

திருகோணமலையில் ஒரு பொம்மைச்சாலை - புகைப்படங்கள்

திருகோணமலையில் ஒரு பொம்மைச்சாலை

ஆலய நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள், நிறுவனத் தலைவர்கள் தங்களது அமைப்புகளுக்குச் சிலை செய்வது என்று முடிவெடுத்தவுடன் திருகோணமலையில் அவர்கள் நாடுமிடம் நகரின் மத்தியில் அமைந்திருக்கும் திரு.பிரம்மஸ்ரீ மு.பத்மநாப சர்மா ஐயா அவர்களின் பொம்மைச்சாலையாகும். யாழ்ப்பாணம் காரைநகரைப் பிறப்பிடமாக கொண்ட இவர் மிக நீண்டகாலமாக திருகோணமலையில் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Monday, November 04, 2013

சம்பூர் ஸ்ரீ பத்­தி­ர­காளி அம்மன் ஆலயம் - புகைப்படங்கள்

 சம்பூர் ஸ்ரீ பத்­தி­ர­காளி அம்மன் ஆலயம்

சம்பூர் இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுப் பகழ்கொண்ட ஊர்.  மூதூர் நகரிலிருந்து 5 KM தொலைவில் உள்ளது இப்பிரதேசம். சம்பூர் வயல்கள் நிறைந்ததும், கடல் மற்றும் குளங்களை கொண்டதுமான‌ அழகிய கிராமமாகும். சம்பூரண வளம் கொண்டமையால் சம்பூரணம் எனவும் பின்னர் திரிபடைந்து சம்பூர் எனவும் பெயர்பெற்றது என்றொரு கருத்துண்டு.

Friday, November 01, 2013

முள்ளிப்பொத்தானையின் மூத்த பெருங்கலைஞைர் அண்ணாவியார் திரு.வடிவேல் சிவப்பிரகாசம்


வரலாற்றுப் புகழ்மிக்க தம்பலகாமத்தில் கள்ளிமேடு பல சிறப்பம்சங்களைக் கொண்ட திடலாகும். இங்கேதான் குளக்கோட்டனாலும், அவன் காலத்திற்குப் பின்னர் ‘கடல்சூழ் இலங்கை கஜபாகு மன்னனாலும்’ உருவாக்கப்பட்ட தம்பலகாமம் ஆதிகோணநாயகரின் வெளிச்சுற்று வழிபாடுகளில் முக்கியமான ‘கள்ளிமேட்டு ஆலையடி வேள்வி வளாகம்’அமைந்திருக்கிறது.