திருமலை நகரில் 'மடை' எனும் மகுடத்தில் நடைபெறவுள்ள 'பாரம்பரியக் கலைகளின் திருவிழாவும்,கலைஞர்களின் கொண்டாட்டமும்'
காலம் - 25.10.2013 வெள்ளி
26.10.2013 சனி
27.10.2013 ஞாயிறு
ஏற்பாடு - இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்
நிகழ்வுகள் - 'மடை'எனும் பெயரில் ஆற்றுகைகளாகவும், காட்சிப்படுத்தல்களாகவும், கலந்துரையாடல்களாகவும் இடம்பெறவுள்ள பாரம்பரியக் கலைகளின் திருவிழாவும் கலைஞர்களின் கொண்டாட்டமும் அடங்கிய நிகழ்வுகள்
இடம் - திருகோணமலையின் உப்புவெளியிலுள்ள சிவானந்த தபோவனத்தில் 25,26,27.10.2013 வெள்ளி,சனி,ஞாயிறு தினங்களில் மு.ப 9.00 தொடக்கம் பி.ப 4.00 வரை கலந்தாய்வரங்குகளும்,காட்சிப்படுத்தல்களும் நடைபெறவுள்ளன.
25.10.2013 வெள்ளிக்கிழமையும் 26.10.2013 சனிக்கிழமையும் மாலை 5.00 மணி தொடக்கம் இரவு 8.00 மணி வரைக்கும் உட்துறைமுக வீதியிலுள்ள இந்து கலாசார மண்டப வளாகத்தில் மட்டக்களப்பு சந்திவெளிக் கலைஞர்களின் மகிடிக் கூத்து ஆற்றுகையும், மலையகக் கலைஞர்களின் காமன் கூத்து ஆற்றுகையும் இடம்பெறவுள்ள அதேவேளையில் நகரக் கடற்கரையில் பாரம்பரிய வாத்திய இசை, களிகம்பு,கபறிஞ்ஞா நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இரவு 8.30 தொடக்கம் 11.30 வரை உப்பு வெளியிலுள்ள சிவானந்த தபோவன மைதானத்தில் மன்னார்,முல்லைத்தீவு,யாழ்ப்பாணக் கூத்துக்கள் ஆற்றுகை செய்யப்படவுள்ளன.
No comments:
Post a Comment