Tuesday, October 15, 2013

இராஜராஜப் பெரும்பள்ளிக்கு ஆதித்த பேரரையன் கொடுத்த தான சாசனம்

திருகோணமலை வரலாறு

ஸ்ரீ பலவன் புதுக்கு
டி யான் ஆதித்தப்
பேரரையன் ஸ்தவ்யா
றாமய னா மானாவதிளானா
ட்டு வெல்க வேரான
ராஜராஜ பெரும்ளிக்கு
வைத்த னொந்தா வி
ளக்கு 1 பசு 8
4
இலங்கைத் தமிழ் சாசனங்கள்
பேராசிரியர்.சி.பத்மநாதன்
412  ம் பக்கம்

இராஜராஜப் பெரும்பள்ளிக்கு ஆதித்த பேரரையன் கொடுத்த தான  சாசனம்  சொல்லும் வரலாறு

திருகோணமலை சோழர் ஆட்சியின் கீழ் வந்த பின்னர் அது பல நிர்வாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்டது. அதில் ஒரு பெரும் பிரிவு இராஜேந்திரசிங்க வளநாடு. இந்த வளநாட்டில் அடங்கி இருந்த ஊர்களில் ஒன்றே வெல்காமம்.

வெல்காமத்தில் இருந்த தமிழ் பௌத்த விகாரை முதலாம் இராஜராஜனது பெயரால் ராஜராஜப் பெரும்பள்ளி என்றும், வெல்காமத்தில் இருந்ததனால் வெல்காமப் பள்ளி ( இன்றைய வெல்கம் விகாரை )என்றும் அழைக்கப்பட்டது.இங்கு கண்டுபிடிக்கப்பட்ட 16 தமிழ் சாசனங்களில் பெரும்பாலானவை தானசாசனங்கள்.

இச்சாசனங்கள் பெரும்பள்ளிக்கு வழங்கப்பட்ட தானங்கள் பற்றிச் சொல்கிறது. தானகாரர்களின் பெயர்,அவரது ஊர்ப் பெயர் ,பதவி அல்லது விருதுப் பெயர் அவர் வழங்கிய நன்கொடை என்பன அச்சாசனங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இச்சாசனங்களில் ஒன்று புதுக்குடி என்ற ஊரைச் சேர்ந்த ஆதித்த பேரரையன் இராஜராஜப் பெரும்பள்ளிக்கு ஒரு விளக்கினையும் ,8 பசுக்களையும் மற்றும் பல பொருட்டகளையும்(சாசன எழுத்துக்கள் தெளிவில்லையாதலால் குறிப்பிட முடியவில்லை) தானமாகக் கொடுத்த செய்தியைப் பதிவு செய்கிறது.

இங்கு குறிப்பிடப்படும் ஆதித்தன் என்பது அவனது இயற்பெயர். பேரரையன் என்பது சோழரின் நிர்வாகத்தில் சேவைபுரிந்த பிரதானிகளில் ஒரு வகையினருக்கு வழங்கப்பட்ட பதவிப்பெயர். அவனது ஊர் புதுக்குடி.புதுக்குடி என்னும் பல ஊர்ப்பெயர்கள் இலங்கையில் உள்ளதால் ஆதித்த பேரரையன் சோழரின் நிர்வாக அதிகாரியாகப் பணிபுரிந்த இலங்கைத் தமிழனா என்ற சந்தேகத்தைத் தருகிறது.

காலம் - 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
இடம் - இராஜராஜப் பெரும்பள்ளி இன்றைய வெல்கம் விகாரை )

இராஜராஜப் பெரும்பள்ளிக்கு ஆதித்த பேரரையன் கொடுத்த தான சாசனம்

த.ஜீவராஜ்
மேலும் வாசிக்க


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment:

  1. அறியாத வரலாற்று செய்தி. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete