
லா மேகச் ச
க்கரவர்த்திகள்
ஸ்ரீ ஜயபா ஹூ தே
வர்க்கு யாண்டு ப
தின் எட்டாவது தம்
பால் ஜீவிதமுடைய
கணவதித் தண்டநாத
நார் உதுத்துறை விக்
கிரமசலாமேகர் நால்
படையையும் ஆஸ்ரி
த்து பேருமிட்டு விக்
கிரிம சலாமேகன்
பெரும் பள்ளி திருவே
ளைக்காறர் அபையம்
இலங்கைத் தமிழ் சாசனங்கள்
பேராசிரியர்.சி.பத்மநாதன்
432 ம் பக்கம்
தமிழ்ப் படைத்தளபதி கணவதி தண்டநாதனார் பாதுகாப்பில் இருந்த திரியாய் விக்கிரமசலாமேகன் பெரும்பள்ளி
1980 ஆம் ஆண்டு திருகோணமலை நகரத்துக்கு வடக்கே புல்மோட்டைக்குச் செல்லும் பாதையில் 35 மைல் தூரத்தில் அமைந்திருக்கும் திரியாய் பகுதியில் மயிலன்குளம் என்னுமிடத்தில் ஒரு தமிழ்ச் சாசனம் அடையாளம் காணப்பட்டது.
கி.பி 1128 இல் எழுதப்பட்டதாகக் கருதப்படும் இச்சாசனம் ஜயபாகு மன்னனின் 18 ஆம் ஆண்டுக்குரியதாகும். அக்காலப்பகுதியில் திரியாய் பகுதியில் இருந்த உதுத்துறை விக்கிரமசலாமேகன் பெரும்பள்ளி என்னும் பௌத்தப் பள்ளி தமிழ்ப் படைத்தளபதி கணவதி தண்டநாதனார் பாதுகாப்பில் இருந்ததை இது உறுதிப்படுத்துகிறது.
சோழருடைய ஆட்சி விலக்கப்பட்ட பின்னரும் திருகோணமலையில் செல்வாக்கு கொண்டிருந்த தமிழ்ப் படையான வேளைக்காறப் படை இங்கு விக்கிரமசலாமேகன் நாற்படை என குறிப்பிடப்படுகிறது. அத்துடன் இதிலிருந்த நாற்படையில் ஒரு பகுதியினர் பௌத்த சமயச் சார்புடையவர்கள் என்பதனையும் அறியக்கூடியதாக இருக்கிறது.
த.ஜீவராஜ்
மேலும் வாசிக்க
வணக்கம்
ReplyDeleteவரலாற்றுப் பதிவு அருமை வாழ்த்துக்கள்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-