எண்ணூறு வருடகால வரலாற்றுப் பழமைமிக்க கள்ளி மேட்டில் கனகரத்தினம் காளிப்பிள்ளை தம்பதிகளுக்கு 1935ஆம் ஆண்டு மாசிமாதம் 16ஆந்திகதி மகனாகப் பிறந்தவர் தான் நமது மதிப்புக்குரிய மெல்லிசைக் கலைஞர் திரு.இலிங்கராசா அவர்கள்.
தமது பத்தாவது வயதில் 'மாரியம்மன் தாலாட்டுப் பாடுவதில்' இவர் தனக்கு ஒப்பாரும், மிக்காருமின்றிச் சிறந்து விளங்கினார். 'கணீர் என்ற குரலில்' இவர் பாடுவதை அனைவரும் விரும்பிக் கேட்டனர். 'காவடிப்பாட்டுக்களைப் பாடுவதிலும் 'உடுக்கு' என்னும் இசைக்கருவியை இலாவகமாகக் கையாள்வதிலும் புலமை பெற்றிருந்தார்.
கள்ளிமேட்டு கண்ணகையம்மன் கோவிலில் இவர் இசைக்கும் 'கண்ணகியம்மன் காவியம்' கேட்போரைப் பரவசப்படுத்தும். இசையூடாக இறைபணியாற்றிய இவ்விசைக்கலைஞர் 2001ஆம் ஆண்டு ஆவணிமாதம் எட்டாந் திகதி இறைவனடி சேர்ந்தார்.
புகழ்பெற்ற அந்த இசைக்கலைஞரின் மறைவுக்குப் பின் அவரது இடத்தை சிறப்புற நிரப்பும் வகையில் அவரது மகன் திரு.லி.பாக்கியராசா அவர்கள் தந்தைவழி நின்று தவறெதுவும் நிகழா வண்ணம் 'மாரியம்மன் தாலாட்டு' காவடிப்பாட்டுகள் 'கண்ணகி காவியம்' போன்ற பாடல்களை 'உடுக்கை' அடித்த வண்ணம் பாடிவருவது அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
வேலாயுதம் தங்கராசா
No comments:
Post a Comment