இராசராசப் பெரும் பள்ளி / வெல்கம் விகாரை
சோழருடய ஆட்சியின் கீழ் திருகோணமலை வந்தபின் இதன் பெயர் இராசராசப் பெரும் பள்ளி என சோழ ஆட்சியாளர்களால் மாற்றப்பட்டிருக்கிறது. இங்கு 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 16 தமிழ் அறக்கொடைச் சாசனங்கள் 1929, 1953 தொல்பொருள் ஆய்வின்போது கிடைக்கப்பெற்றன.
இவ் விகாரை தமிழ் பௌத்த துறவிகளால் நிர்மானிக்கப்பட்டு , நிர்வகிக்கப்பட்டதோடு அதற்கு தானம் வளங்கியவர்களும் , அயலில் வாழ்ந்தவர்களும் பொலநறுவைக்கால தமிழ் பௌத்தர்கள் என்பதனை சாசன ஆதாரங்கள் உறுதிப்படுத்துகிறது. அத்துடன் சோழ ஆட்சியாளர்களால் இவ்விகாரை பாதுகாக்கப்பட்டு, ஆதரவளிக்கபட்டதுடன் வெல்காமம் என்னும் ஈழமண்டலத்தின் இராஜேந்திரசிங்க வளநாட்டில் இவ்விகாரை அமைந்திருந்ததால் வெல்காமப்பள்ளி என்றும் அழைக்கப்பட்டது.
எனவே இன்று இலங்கையில் வடகிழக்குப் பகுதியில் காணப்படும் புராதான பௌத்த விகாரைகள் தொடர்பான புரிதலுக்கு இலங்கையில் 'தமிழ் பௌத்தம்' பற்றிய ஆராய்வு அவசியமாகிறது.
இலங்கையில் 'தமிழ் பௌத்தம்'
நற்காட்சி - Right View
நல்லெண்ணம் - Right Thought
நன்மொழி - Right Speech
நற்செய்கை - Right Conduct
நல்வாழ்க்கை - Right Livelihood
நன்முயற்சி - Right Effort
நற்கடைப்பிடி - Right Mindfulness
நற்தியானம் - Right Meditation
போன்ற எட்டு நெறிமுறைகளை அடிப்பையாகக் கொண்ட பெளத்தம் தற்போது உலகில் ஏறத்தாழ 350 மில்லியன் மக்களால் பின்பற்றப்படுகிறது. இந்தியாவில் தோன்றிய பெளத்தம் பின்னர் படிப்படியாக மத்திய ஆசியா, இலங்கை, திபெத், தென்கிழக்கு ஆசியா மற்றும் கிழக்காசிய நாடுகளாகிய சீனா, வியட்நாம், ஜப்பான், கொரியா, மங்கோலியா ஆகிய நாடுகளுக்கும் பரவியது.
கி.மு மூன்றாம் நூற்றாண்டில் அசோக மன்னரும் அவரது உறவினராகிய மகிந்தர் (மகேந்திரரும்) மற்றும் அவரைச் சேர்ந்த பிக்குகளாலும் பௌத்தம் தமிழ்நாட்டில் பரப்பப்பட்டது. பண்டைக்காலத்தில் பௌத்தமதம் தமிழ்நாட்டில் வழக்கில் இருந்தபோது அது அரச ஆதரவைப் பெற்றிருந்ததோடு தமிழ் இலக்கியத்திலும் பெரும் செல்வாக்கு செலுத்தி இருந்தது. அக்காலத்தில் தமிழ்பௌத்தர்களால் பல நூல்கள் இயற்றப்பட்டன.
1. மணிமேகலை - மதுரைக் கூலவாணிகர் சீத்தலைச் சாத்தனார்
2. வீரசோழியம் - புத்தமித்திரனார்
3. குண்டலகேசி - நாதகுத்தனார்
4. சித்தாந்தத் தொகை - ?
5. திருப்பதிகம் - ?
6. விம்பசார கதை - ?
தமிழ்நாட்டில் பௌத்த மத வீழ்ச்சிக்குப் பிறகு மேற்குறித்த பௌத்த நூல்களில் இலக்கியத்தில் ஒன்றும் (மணிமேகலை) இலக்கணத்தில் ஒன்றும் (வீரசோழியம்) ஆக இரண்டு நூல்களே தற்போது முழுநூலாக எஞ்சி நிற்கின்றன.
தமிழ்நாட்டில் பௌத்த சங்கத்தின் அங்கத்தினரான தேரர்கள் நாடெங்குஞ் சென்று பௌத்த கொள்கையைப் பரவச் செய்தனர். அவர்கள் தமது மதக் கொள்கையைப் போதிப்பதையே தமது வாழ்நாட்களின் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர்.
அரசர், வணிகர், செல்வந்தர் முதலானவர்களின் ஆதரவுடன் விகாரைகளையும், பள்ளிகளையும், சேதியங்களையும்(வழிபாட்டு இடம்) , நிறுவினர். அத்துடன் இலவச மருத்துவம், இலவச கல்வி மற்றும் ஏழைகளுக்கு உணவு கொடுத்துதவுதல் ,அங்கவீனர்களுக்கு உதவுதல் என்பவற்றுக்கூடாகவும் மக்களுக்கு மதபோதனைகளை எடுத்துச் சென்றனர்.
த.ஜீவராஜ்
தொடரும்....
ஆதாரங்கள்1. இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் - பேராசிரியர்.சி.பத்மநாதன்.2006.
2. பௌத்தமும் தமிழும் - மயிலை திரு.சீனி. வேங்கடசாமி (1900-1980)
3. இராசராசப் பெரும் பள்ளி / வெல்கம் விகாரை - புகைப்படங்கள் - த.ஜீவராஜ்
Dear Dr
ReplyDeleteI have gone through the article. It is really wonderful. I knew that during Chola regime most of the Tamils adopted to Buddhism. If you visit the jungles of Sunkankuli, Theenery and other surroundings you can find lots of evedents of our Tamil civilization. I appreciate your talent. We have to bring our heritage into light. We guide our generation to study our culture and civilization.
Kernipiththan
Dear Dr....
ReplyDeleteReally its a great search.a wonderful flow of JEEVANATHY
நன்றி
ReplyDeleteGreat Article.
ReplyDeleteசிறந்த முயற்சி எம் நாட்டுக்கும் எம்மக்களுக்கும் தேவையான ஒன்று.
ReplyDeleteசிறந்த முயற்சி எம் நாட்டுக்கும் எம்மக்களுக்கும் தேவையான ஒன்று.
ReplyDeleteசிறந்த முயற்சி எம் நாட்டுக்கும் எம்மக்களுக்கும் தேவையான ஒன்று.
ReplyDeleteஅருமை யான தகவல்கள்
ReplyDeleteநன்றி