
கல்லூரியின் நிருவாகத்திற்கும் பாடசாலை மாணவர்களின் மேம்பாட்டிற்கும் கை கொடுத்து உதவும் நோக்குடன் இயங்கி வரும் இச்சங்கமானது பல்வேறு வகைகளிலும் கல்லூரியின் முன்னேற்றத்திற்காக உழைத்து வருகிறது.
பழைய மாணவர் சங்கத்தின் நோக்கங்கள்.
1. கல்லூரியின் வளர்ச்சி, அபிவிருத்தி, முன்னேற்றம் என்பவற்றுக்கான சகல செயற்பாடுகளிலும் முன்னின்று உழைத்தல்.
2. கல்லூரியின் அபிவிருத்திச் சங்கத்தின் நடவடிக்கைகளுக்கு பக்கபலமாக ஒத்துழைப்பு நல்குதல்.
3. கல்வி மேம்பாட்டின் அடிப்படையில் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களிற்கும், பெற்றோருக்கும், பாதுகாவலருக்கும், அதிபர், ஆசிரியர்கட்கும் வேண்டிய உதவிகளைச் செய்தலும்! நடுநிலைமை வகித்தலும்.
4. கல்லூரியின் அவசிய தேவையின் போது உரிய செயற்பாடுகளிற்கு பூரண ஒத்துழைப்பு நல்குதல்.
5. கல்விச்செயற்பாடுகளிலும், அதனுடன் இணைந்த செயற்பாடுகளிலும் சாதனை படைக்கும் மாணவர்களையும், பழைய மாணவர்களையும் கௌரவித்தல்.
6. கல்லூரியின் சிறப்பான செயற்பாடுகளை இனங்காட்டும் வெளியீடுகளை செய்தல்.
7. கல்லூரியின் செயற்பாடுகளிற்கு பங்களிக்கும் முகமாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வதியும் பழைய மாணவர்களை ஒருங்கிணைத்தல்.
அங்கத்துவம்
2012ல் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினர்களின் எண்ணிக்கை 824 ஆக இருந்தது. இந்த ஆண்டில் 76ஆல் அதிகரித்து 900 ஆக உயர்ந்துள்ளது. ஆயிரக்காணக்கான மாணவர்கள் கல்லூரியிலிருந்து வெளியேறி சமூகத்தில் பல உயர் பதவிகளுடன் உள்ள போதும் எமது உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டவில்லை என்பது வேதனைக்குரிய விடயமாகும்.
எதிர்காலத்தில் அதிக எண்ணிக்கையான பழைய மாணவர்கள் தாமாகவே உள்வந்து சங்கத்தையும், கல்லூரியையும் வளர்ச்சியடைய செய்ய வேண்டுமென்பது எமது அன்பான வேண்டுகோளாகும்.
பவள விழா

எனவே பழைய மாணவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு வரலாற்று புகழ்கொண்ட எமது கல்லூரியின் பழைய மாணவர் சங்க பவளவிழா நிகழ்வினை சிறப்புற நடாத்தி முடிப்பதற்கு எம்முடன் இணைந்து செயற்பட வருமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
பழைய மாணவர் சங்கம்
தி/இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி
(தேசிய பாடசாலை)
திருக்கோணமலை
தொடர்புகளுக்கு
தலைவர்
திரு.செ.பத்மசீலன் (அதிபர் )
தொலைபேசி 026 2222426
மின்மடல்
oba@trincohindu.sch.lk
பொருளாளர் - திரு.ச.சர்வேஸ்வரன்
வங்கி கணக்கிலக்கம்
0002367355
இலங்கை வங்கி
திருகோணமலை.
sir why r u notapplied for Google Adsense
ReplyDeleteapply immediately