Friday, September 27, 2013

'தமிழ்த் தேரர்கள் ஆற்றிய பணிகள்' - இலங்கையில் 'தமிழ் பௌத்தம்' - பகுதி - 2

புத்தர்

தமிழ்ப் படைத்தளபதி கணவதி தண்டநாதனார் பாதுகாப்பில் இருந்த திரியாய் விக்கிரமசலாமேகன் பெரும்பள்ளி

1980 ஆம் ஆண்டு திருகோணமலை நகரத்துக்கு வடக்கே புல்மோட்டைக்குச் செல்லும் பாதையில் 35 மைல் தூரத்தில் அமைந்திருக்கும் திரியாய் பகுதியில்  மயிலன்குளம் என்னுமிடத்தில் ஒரு தமிழ்ச் சாசனம் அடையாளம் காணப்பட்டது.

கி.பி 1128 இல் எழுதப்பட்டதாகக் கருதப்படும் இச்சாசனம் ஜயபாகு மன்னனின் 18 ஆம் ஆண்டுக்குரியதாகும். அக்காலப்பகுதியில் திரியாய் பகுதியில் இருந்த உதுத்துறை விக்கிரமசலாமேகன் பெரும்பள்ளி என்னும் பௌத்தப் பள்ளி தமிழ்ப் படைத்தளபதி கணவதி தண்டநாதனார் பாதுகாப்பில் இருந்ததை இது உறுதிப்படுத்துகிறது.

Thursday, September 26, 2013

திருகோணமலையின் வயலின் இசைக்கலைஞர் சங்கீத பூசணம் திரு.வல்லிபுரம் சோமசுந்தரம்


எண்ணூறு வருடகாலப் பழமையுடைய தம்பலகாமத்தில் 'கூட்டாம்புளி' என்னும்திடல் பிரசித்தமானது.'கூட்டம் கூட்டமாக புளி வளர்த்த கூட்டாம்புளி'என கவிஞர் தம்பலகாமம் க.வேலாயுதம் அவர்கள் இதனைப் புகழ்ந்து பாடியுள்ளார்.

கேரளத்துப் பல்கலைக் கழகப் பேராசிரியர் திரு.சத்தியமூர்த்தி அவர்களும், சங்கீத இசை ஆர்வலர் திரு.மாரிமுத்து அவர்களும், தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில் அறக்காவல் சபையின் செயலாளர் திரு.நாகராசா அவர்களும் இத்திடலைத் தாயகமாகக் கொண்டவர்கள்.

Wednesday, September 25, 2013

இலங்கையில் 'தமிழ் பௌத்தம்' - பகுதி - 1

Gautama Buddha

இராசராசப் பெரும் பள்ளி / வெல்கம் விகாரை

திருகோணமலை நகரத்தில் இருந்து வவுனியா செல்லும் பாதையில் கன்னியா வென்னீரூற்றைத் தாண்டி வரும் பெரியகுளம் பகுதி வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பிரதேசமாகும். இங்கு வெல்கம் விகாரை அமைந்திருக்கிறது. வெல்கம் விகாரை என்னும் இந்தப் பௌத்தப் பள்ளி திராவிடக் கலைப்பாணியில் அமைந்த ஒரேயொரு 'தமிழ் பௌத்த பள்ளியாகும்'. இதன் இன்னொரு பெயர் நாதனார் கோவில் என்பதாகும்.

Wednesday, September 18, 2013

தம்பலகாமத்தின் இளங்கவிஞன் கணேசபிள்ளை சுமன்


தம்பலகாமத்தின் இளங்கவிஞனாகிய திரு.கணேசபிள்ளை சுமனின் ‘ஊன்றிய விழுது’ ‘பிரபஞ்சம்’ ஆகிய இரு கவிதைத் தொகுதிகள் அண்மையில் தம்பலகாமம் ஆதிகோணேஸ்வரா மகாவித்தியாலயத்தில் வெளியிடப்பட்டன.

திருகோணமலை தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு.கு.திலகரத்தினம் அவர்களின் தலைமையில் இவ்வெளியீட்டு விழா மிகச்சிறப்பாக இடம் பெற்றது. தம்பலகாமத்தின் பிரதேசச் செயலர் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இவ்விழாவைச் சிறப்பித்தார்.

ஆலங்கேணி எனும் அற்புதக் கிராமம் - கேணிப்பித்தனின் ஞாபகமீட்டல்

ஆலங்கேணி

உப்பு நீர்ச் சிற்றாறு ஊரும் - தென்றல்
ஓடி வந்து மரஞ்செடியில் சாரும்
செப்பலியும் மீனினமும் கூடும் - ஊரி
சேர்ந்து ஊதச் சிள்வண்டும் பாடும்.

கண்ணா வேர் மூச்செறிந்து வெடிக்கும் - கேட்ட
கான் குருவி மேலெழுந்து நடிக்கும்
மண் அளைந்து நண்டு விளையாடும் - மேதி
மாவலியின் தண் கரையை நாடும்

Monday, September 16, 2013

2013 பழைய மாணவர் ஒன்று கூடல் - புகைப்படங்கள்

Old Boys Association of Trincomalee RKM Sri Koneswara Hindu College

பழையமாணவர் ஒன்று கூடல் நிகழ்வில் எமது பாடசாலையில் கல்வி கற்று துறைசார் உன்னத நிலையை அடைந்த பழைய மாணவர்களை வருடாந்த பழைய மாணவர் ஒன்று கூடலில் அழைத்து கௌரவிப்பது எமது நடைமுறை.

தம்பலகாமம் VS தம்பலகமம் - இடப்பெயர் ஆய்வு நிறைவுப் பகுதி

தம்பலகாமம்

தம்பை நகர் என்று திரிகோணாசலப்புராணம் சிறப்பித்துக்கூறும் கிழக்கிலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்திருக்கும் நீர்வள, நிலவளச் சிறப்பைக் கொண்டமைந்த தம்பலகாமம் என்னும் கிராமத்தின் இடப்பெயர் ஆய்வின் ஒரு பகுதியாக ‘தம்பலகாமம்’ என்னும் ஊரின் வரலாற்றுத் தொன்மைதனை இதுவரை சுருக்கமாகப் பார்த்தோம்.

Thursday, September 12, 2013

'' தம்பலகாமப்பற்று வன்னிமையும் , தேசவழமையும் '' - இடப்பெயர் ஆய்வு பகுதி 6

Thampalakamam

1815 ஆம் ஆண்டு பிரதமநீதியரசர் அலெஷாந்தர் ஜோன்ஸ்ரன் ஒல்லாந்து அரசாங்கம் தமிழர் வாழும் பகுதிகளுக்கென தொகுத்து சட்டமாக்கிய தேசவழமைகளின் பிரதிகளை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி இருந்தார். அவற்றின் பிரதிகள் அலெஷாந்தர் ஜோன்ஸ்ரன் ஆவணச் சுவடிகள் என்ற தொகுப்பாக வெளிவந்தன.  தம்பலகாமப்பற்று வன்னிமை பற்றியும் ,அங்கிருந்த தேசவழமை பற்றியும் அறிய உதவும் வரலாற்றாதாரங்களாக இவ்வாவணம் விளங்குகின்றது.

Wednesday, September 11, 2013

சண் இசைக்குழுவின் ஸ்தாபகர் பாடகர் கலைஞர் திரு.சண்முகலிங்கம் முருகதாஸ்

Muruhadas

கல்விமேடு தம்பலகாமத்தில் பழமையில் பெரிதும் பேசப்பட்ட இடமாகும். ‘கள்ளி  மேடே’ காலப்போக்கில்  கல்வி  மேடாக மருவியது என அறிஞர் கூறுவர்.தம்பலகாமத்தில் புகழ் பூத்த கலைஞர்களும் ஆயுள்வேத வைத்தியர்களும் வாழ்ந்த இடம் கல்விமேடே.

வரலாற்றுப்புகழ் மிக்க தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயிலின் வெளிச்சுற்று வாழிபாடுகளில் முக்கியத்துவம் பெறுகின்ற ‘கண்ணகி அம்மன் பொங்கல்விழா’ வருடாவருடம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்ததுடன் இவ்வழிபாடுகளுக்கென ‘கடல்சூழ் இலங்கை கயபாகு மன்னனால்’ கல்வி மேட்டு ஆலையடியில் ஒரு வேள்வி வளாகமே வளங்கப்பட்டிருந்தது என வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.

1987 '' கோணைத் தென்றல் '' இலக்கியத் திங்கள் ஏடு

கோணைத் தென்றல்

Monday, September 02, 2013

பழைய மாணவர் சங்கம் - தி/இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி

R.K.M. Sri Koneswara Hindu College

திருகோணமலை மாவட்டத்தில் முதன்மைக் கல்வி நிறுவனமாக 116 ஆண்டுகளாகத் தொடர்ந்து சிறப்பான பணிகளை சமூகத்துக்கு ஆற்றி வருவதில் எமது கல்லூரி முன்னிலை வகிப்பது எமக்கெல்லாம் பெருமை சேர்க்கும் விடயமாகும். மாவட்ட, மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் எமது கல்லூரி தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்று கல்விச் செயற்பாட்டிலும், ஏனைய இணைப் பாடவிதானங்களிலும் சிறப்பாக செயற்பட்டு வருவது நாம் எல்லோரும் அறிந்ததே.

இப்பெருமைக்குரிய கல்லூரியின் அபிவிருத்திப் பணியில், அதன் வளர்ச்சிக்குத் தொடர்ந்தும் தம்மை இணைத்துக்கொள்ளும் உயரிய சிந்தனையில் எமது பழைய மாணவர் சங்கம் இயங்கி வருவதையிட்டு நாம் பெருமைகொள்ள வேண்டும்.

பவள விழாவை நோக்கி பழைய மாணவர் சங்கம்

R.K.M. Sri Koneswara Hindu College

வரலாற்று புகழ் மிக்க திருக்கோணேஸ்வரம் அமைந்துள்ள புனித நகராகிய திருக்கோணமலை மாவட்டத்தில் பல்வேறு துறைகளிலும் முண்ணனியில் திகழ்ந்து வரும் தேசிய பாடசாலையான எமது கல்லூரிக்கு அதன் வளர்ச்சிப் போக்கில் உறுதுணையாகவும் பக்க பலமாகவும் அமைவதற்காக பழைய மாணவர் சங்கம் உருவாக்கப்பட்டது.