சிலவேளைகளில் எந்தப்பதிவுகளையும் வைக்காமல் மிகவேகமாக உறுண்டோடி விடுகிறது காலம். நிதானித்து நிமிர்ந்து உட்காருகையில்தான், ஆகா இந்த வருடம் முடிந்துவிட்டதா? என்ற ஆச்சரியம் தோன்றும்.
இன்றுடன் ஐந்து வருடங்களை நிறைவு செய்யும் 'ஜீவநதி' வலைப்பதிவு பேருக்கேற்றபடி ஆங்காங்கே கூடிக்குறைந்தாலும் மிகைப்படாமலும், வற்றிப்போகாமலும் தான் நினைத்த இலக்கினை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதோடு தான் கடந்து வந்த காலத்தினை சந்தோசத்தோடு மீட்டுப்பார்க்கவும் வைத்திருக்கிறது.
இற்றைவரை எனது பாட்டனார் அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்களின் 62 பதிவுகளுடனும், எனது தந்தை திரு.வே.தங்கராசா அவர்களின் 40 பதிவுகளுடனும், எனது (த.ஜீவராஜ்) 138 பதிவுகளுடனும் பயணித்துக்கொண்டிருக்கிறது இந்த வலைப்பதிவு. கடந்த ஐந்து வருடகாலமாக இணையவெளியிலும் , நேரிலும் தங்களது ஆக்கபூர்வமான கருத்துக்கள் மூலம் உற்சாகமூட்டிவரும் நட்புள்ளங்களுக்கு 'ஜீவநதி' தனது மனம்நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
13.08.2008 அதிகாலை 12.49 மணிக்கு மனம் துடிக்கும் என்னும் முதல் பதிவு இணையவெளியில் இணைந்துகொண்டது. அன்று அந்தக்கணத்தில் இருந்த அதே உற்சாகம் இன்றும் தொடர்வது சந்தோசமான விடையம். திரட்டிகள், சமூகவலைத்தளங்கள் என்பன இந்த உற்சாகம் குன்றவிடாமல் துணைநிற்கும் தூண்கள் என்றால் அது மிகையில்லை.
பொழுதுபோக்கு,மனநிறைவு போன்ற பலன்களுக்கு அப்பால் தனிப்பட்ட வாழ்வில் துன்பங்கள் சூழ்கின்ற வேளைகளில் ஒரு உளவலுவூட்டும் ஊக்கியாக இந்த வலைப்பதிவு இருப்பதையும் மறுப்பதற்கில்லை. நாளும் புதுப்புது அறிமுகங்களையும், அங்கிகாரங்களையும் உருவாக்கித்தரும் இந்த 'ஜீவநதி' வலைப்பதிவைத் தொடர்வது மகிழ்ச்சிதருவதாய் இருக்கிறது.
நட்புடன் ஜீவன்.
13.08.2013.

என் அன்பு வாழ்த்துக்கள் ஜீவன். தொடருங்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteஎனது முதல் வலைப்பதிவை ஆரம்பிக்க ஆவல்வூட்டிய தமிழ் வலைப்பூக்களில் ஜீவநதியும் ஒன்று என்று இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். மேலும் நீங்கள் எனக்கு முதல் மறுமொழியையும் இட்டீர்கள் என்பதையும் நினைத்துப் பார்க்கிறேன்.
தொடரட்டும் உங்கள் பணி
மிக்க நன்றி நண்பர்களே
ReplyDelete