Wednesday, August 21, 2013

திருகோணமலைத் தமிழ்ச்சங்கம் நடத்திய “முத்தமிழ் விழா” - புகைப்படங்கள்

திருகோணமலை முத்தமிழ் விழா

திருகோணமலைத் தமிழ்ச்சங்கம் ஆனி 30ஆந்திகதி பி.ப.2.30 மணியளவில் திருகோணமலை உவர்மலை விவேகானந்தாக் கல்லூரியில் முத்தமிழ்விழாவை மிகச்சிறப்பாகக் கொண்டாடியது. பிரதம விருந்தினராகக் கிழக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளர் ஜனாப்.எம்.ரி.ஏ.நிசாம் அவர்களும் சிறப்பு விருந்தினராக திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.ந.விஜேந்திரன் அவர்களும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
மங்கள விளக்கேற்றலுடன் தமிழ்த்தாய் வாழ்த்தினை தி/ உவர்மலை விவேகானந்தாக் கல்லூரி மாணாக்கர்கள் இசைக்க திருகோணமலை செல்வநாயகபுரம் இந்து மகாவித்தியாலய மாணாக்கர்கள் வரவேற்பு நடனத்தை நிகழ்த்தினர். தொடர்ந்து வரவேற்புரையை திருமதி காயத்திரி நளினி காந்தன் அவர்களும் தலைமையுரையை தமிழ்ச்சங்கத்தலைவர் திரு.கு.திலகரத்தினம் அவர்களும் நிகழ்த்த விழாகளை கட்டியது.


தி /ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியைச் சேர்ந்த செல்வி சோபிதா சந்திரமோகனின் நடனத்தைத் தொடர்ந்து கல்லூரி அதிபர் திரு.சீ.மதியழகன் அவர்களின் சிறப்புரை இடம் பெற்றது. ‘கிராமிய இசை’ என்ற நிகழ்ச்சியை கட்டைபறிச்சானைச் சேர்ந்த விவேகானந்தா வித்தியாலயம் வழங்க ஓவியத்திற்கான முதற்கட்ட பரிசளிப்பும் சிறப்பு விருந்தினராகிய திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.ந.விஜேந்திரன் அவர்களின் சொற்பொழிவும் இடம் பெற்றது.

தொழிலதிபர் திரு.க.திருச்செல்வம் அவர்களின் சொற்பொழிவை அடுத்து திருகோணமலை ஸ்ரீ மாதுமையம்பாள் வித்தியாலத்தின் ‘புதுமை நடனமும்’ திருகோணமலை புனிதமரியாள் கல்லூரி மாணவிகள் வழங்கிய இசையும் ஓவியத்திற்கான இரண்டாம் கட்டப் பரிசளிப்பும் இடம் பெற்றன.

கொழும்பு தமிழ்சங்க உபதலைவரான சட்டத்தரணி திரு.இராஜேந்திரா அவர்களின் சொற்பொழிவு அனைத்துப் பார்வையாளர்களையும் வெகுவாகக் கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து இலங்கை துறைமுகத்துவாரம் இந்துக் கல்லூரியின் ‘நவீன கூத்தும்’ வவுனியாவைச் சேர்ந்த கலாநிதி அகளங்கன் அவர்களின் சொற்பொழிவும் ஓவியத்திற்கான மூன்றாம் கட்டப் பரிசளிப்பும் திருகோணமலை உவர்மலை விவேகானந்தாக் கல்லூரியின் ‘புதுமை நடனமும்’இடம் பெற்றன.

தொடர்ந்து பாடசாலை ரீதியாகவும் மாவட்ட ரீதியாவும் இடம்பெற்ற கவிதை சிறுகதைப் போட்டிகளுக்கான பரிசளிப்பு இடம் பெற்றது. வெளிவாரியாக இடம் பெற்ற போட்டிகளின் பரிசுகளை ஊடகவியலாளர்களும் ஆலங்கேணியைச் சேர்ந்த கவிஞர் திரு.அ.கௌரிதாசன் போன்றோர்களும் பெற்றுக் கொண்டதைக் காணக்கூடியதாக இருந்தது.

இதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஜனாப். எம்.ரி.எ.நிசாம் அவர்களின் அற்புமான அதிதி உரை இடம் பெற்றது. புள்ளிவிபரங்களுடன் தனது சொற்பொழிவைத் தொடர்ந்த மாகாணக் கல்விப்பணிப்பாளர் அவர்கள் இதுபோன்ற தமிழ்ச்சங்கங்கள் பாடசாலை மட்டத்திலும் பணிகளை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் எனச் சுட்டிக்காட்டத் தவறவில்லை. கவிதை சிறுகதைகளுக்கான போட்டிகளில் வெற்றி பெற்ற கலைஞர்களுக்கு பரிசுகளையும் இவர் வழங்கிச் சிறப்பித்தார்.

தொடர்ந்து திருகோணமலை புனிதமரியாள் கல்லூரியின் நாடகமும் திருகோணமலை உவர்மலை விவேகானந்தாக் கல்லூரியின் தமிழ் மொழி வாழ்த்தும் இடம் பெற்றன. தமிழ்சங்கத்தின் செயலாளரும் ஈழத்து சிறுவர் இலக்கிய முன்னோடியுமாகிய திரு.ச.அருளானந்தம் அவர்களின் நன்றியுரையுடன் முத்தமிழ் விழா இனிதுற நிறைவு பெற்றது.

திருகோணமலை முத்தமிழ் விழா
திருகோணமலை முத்தமிழ் விழா
திருகோணமலை முத்தமிழ் விழா
திருகோணமலை முத்தமிழ் விழா
திருகோணமலை முத்தமிழ் விழா
திருகோணமலை முத்தமிழ் விழா
திருகோணமலை முத்தமிழ் விழா
திருகோணமலை முத்தமிழ் விழா

படங்களும்,செய்தியும்
வேலாயுதம் தங்கராசா


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

2 comments:

  1. Dear Dr
    We have to document our activities to our generation and Diasporas. It is a fine attempt of recordings. Thanka has taken tireless efforts and I have to thank thanka and his son Dr.Jeeva. Thanks a lot
    Kernipiththan

    ReplyDelete
  2. Dear Dr
    We have to document our activities to our generation and Diasporas. It is a fine attempt of recordings. Thanka has taken tireless efforts and I have to thank thanka and his son Dr.Jeeva. Thanks a lot
    Kernipiththan

    ReplyDelete