தம்பலகாமத்தில் ‘நாயன்மார்திடல்’ மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொரு இடமாகும். இங்கேதான் வரலாற்றுப் புகழ்மிக்க ‘நாயன்மார் கோயில் வேள்வி வளாகம்’ அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு அருகாண்மையில் வடக்குப்புறமாக அமைந்துள்ளது மிருதங்கக் கலைஞர் திரு. ந. குழந்தை வடிவேல் அவர்களின் வீடாகும்.
அவரின் தகப்பனார் திரு. மாணிக்கம் அவர்கள் அந்நாட்களில் சிறந்த கலைஞராக விளங்கினார். மேடைகளுக்கான காட்சிகளை திரைகளில் வரைவதிலும் ‘மேக்கப் கலையிலும்’ சிறந்து விளங்கினார். தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயிலில் இடம் பெறும் 17 வது திருவிழாவில் இவரது வாணவேடிக்கைகளும் குதிரை ஆ ட்டமும் மக்களைப் பெரிதும் கவர்ந்த நிகழ்ச்சிகளாகும்.
இத்தகைய சிறந்த கலைஞராகிய பெரியார் மாணிக்கம் அவர்களுக்கும் அவரது தர்ம பத்தினிக்கும் ஐவர் ஆண் பிள்ளைகள். அவர்களில் ஒருவர்தான் நமது பெருமைக்குரிய கலைஞர் மிருதங்க டோல்கி வித்துவான் திரு.குழந்தைவடிவேல் அவர்கள்.
இயற்கையாகவே கூச்சசுபாபம் உடையவரான திரு.குழந்தைவடிவேல் அவர்கள் தனது திறமைகளை உடனடியாக வெளிக்காட்ட மாட்டார். கலாபூசணம் கந்தர்வகான இசைமணி திரு.க.சண்முகலிங்கம் அவர்கள் இவரிடம் காணப்பட்ட ஆற்றல்களை இனம் கண்டு தனது இசைக்குழுவில் இவரையும் ஒரு கலைஞனாக இணைத்துக் கொண்டார்.
இதனூடாக இவரது பெயர் தம்பலகாமம் எங்கும் பரவத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து கிண்ணியா, ஆலங்கேணி ,மூதூர் ,கட்டைபறிச்சான் ,சேனையூர் போன்ற இடங்களில் இவர்களது இசை நிகழ்ச்சி இடம் பெற்று பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிகழ்ச்சிகள் மூலம் கலைஞர் குழந்தைவடிவேல் மிருதங்கம், டோல்கி போன்ற கருவிகளை மீட்டி மக்களிடம் அமோக ஆதரவைப் பெற்றார்.
வேலாயுதம் தங்கராசா
Dear Dr.
ReplyDeleteI have personalty witnessed his talent. Thanga has taken great pain to bring such artist to light. We have to introduce our talented artists to the world. Our generation little by little loosing our culture and heritage. I appreciate the marvelous work of Thanka.
Kernjipiththan

Such an honor to have read this, It's weird that being his relative i never knew he was such a great artist,
ReplyDeleteThank you for bringing this to lime light,
Such an honor to have read this, It's weird that being his relative i never knew he was such a great artist,
ReplyDeleteThank you for bringing this to lime light,
It is such an honor to have read this,
ReplyDeleteAnd i feel ashamed that i have been so close to him so far and never came to know about this
He has been projected as a shy and a private person
Thank you for bringing this to our notice
I shall call him right away and know more about this "UNSUNG HERO OF OUR BIG FAMILY"
Gowthaman Thirunavukkarasu (Nephew)