கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு பிரதேசத்தில் பெரிதும் மக்களால் பேசப்படுகின்ற மலைக் கோயில்களில் தாந்தா மலை முருகன் ஆலயமும் ஒன்றாகும். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆலயமாக இது மக்களால் பேசப்படுகிறது. பழமையும், வரலாற்று முக்கியத்துவமும் நிறைந்த கதிர்காம முருகன் ஆலயத்துடன் தாந்தாமலை முருகன் ஆலயத்தையும் மக்கள் இணைத்துப் போற்றி வருகின்றனர்.
தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயம் கவனிப்பாரற்று காடு சூழ்ந்து இருந்தபொழுது அங்கிருந்த கட்டிடங்களும் வழிபாட்டிடங்களும் அழிந்திருக்க வேண்டும் என அறிஞர் கருதுகின்றனர். முனைக்காட்டைச் சேர்ந்த திரு.கா.பாலிப்போடியார் என்னும் அன்பரின் கனவில் முருகப்பெருமான் தோன்றி “தாந்தாமலை என்னும் அடர்ந்த காட்டுக்குள் தான் வாழ்வதாகவும் அந்தக்காட்டைத் துப்பரவு செய்து ஆடித்தீர்த்தோற்சவத்தினைச் செய்யுமாறும்” கூறி மறைந்தாராம். இதனைத் தொடர்ந்து தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயம் அமைந்திருந்த காட்டுப் பகுதியை அழித்தொழித்து தாந்தாமலையில் பூசைகளும் வழிபாடுகளும் இற்றைவரை சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
இவ்வாலயத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அதிகமான கிராமங்கள் திருவிழாவைப் பொறுப்பேற்று செய்து வருவது ஒரு சிறப்பம்சமாகும். இங்கு இருபத்தொரு திருவிழாக்கள் மிகச்சிறப்பாகக் கிராமமக்களால் செய்யப்பட்டு வருகின்றன. 22ஆம் நாள் தீர்த்த உற்சவம் ஆகும்.
ஆலயம் ஆரம்பகாலத்தில் மலைக்கோயிலாகவும் பின்னர் கொத்துப் பந்தலாகவும் காணப்பட்டிருக்கிறது. அக்கால ஆலயங்கள் அழிவுற்றபின் மலையடிவாரத்தில் முருகன் ஆலயம் அமைக்கப்பட்டிருகிகிறது. அதனைச்சூழ வள்ளியம்மன் ஆலயம், தெய்வானையம்மன் ஆலயம் ,விஷ்ணு ஆலயம், நாகதம்பிரான் ஆலயம் ,முத்துலிங்கேஸ்வரர் ஆலயம் என்னும் ஆலயங்களும் மலை உச்சியில் விநாயகப்பெருமான் ஆலயமும் அமைந்துள்ளன. ஆகம முறைக்கமைய அமைந்துள்ள இவ்வாலயங்களில் நித்திய பூசைகள் ஒழுங்காக நடைபெற்று வருகின்றன.
த.ஜீவராஜ்

தீர்த்தம்
விநாயகப்பெருமான் ஆலயம்
படங்கள் அனைத்தும் அழகாவும், துல்லியமாவும் இருக்கு
ReplyDeleteதந்தாமலை முருகள் ஆலயம் ,வரலாறு, சிறப்புகள் கண்டுகொண்டேன்.
ReplyDeleteபடங்கள் நன்றாக இருக்கின்றன.
இப்போது திருவிழாக் காலமா?
ReplyDeleteபடங்கள் அனைத்தும் பளிச்சென்று இருக்கின்றன.
தந்தாமலை முருகன் ஆலயத்திற்குச் செல்லும்
ReplyDeleteபிரதான பாதை மட்டக்களப்பில் எங்குள்ளது ?