Saturday, June 15, 2013

உலக இரத்ததானம் செய்வோர் தினம் World Blood Donor Day 14.06.2013

உலக இரத்ததானம் செய்வோர் தினம் World Blood Donor Day 14.06.2013

உலக இரத்ததான தினம் World Blood Donor Day ஆண்டுதோறும் ஜுன் மாதம் 14ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்புடன் உலக சுகாதார நிறுவனத்தால் சர்வதேச ரீதியில் அனுஸ்டிக்கப்படுகின்றது.

இரத்ததானம் அல்லது குருதிக் கொடை (blood donation) என்பது ஒருவர் தனது இரத்தத்தை பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும்.

இரத்த தானம் அளிப்போர் அடையும் நன்மைகள்

1. இரத்தப் பிரிவு, இரத்தத்தில் மஞ்சள் காமாலை, மலேரியா, பால்வினை நோய் மற்றும் எய்ட்ஸ் கிருமிகள் உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டு இரத்ததானமளிப்பவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. ( Free health screening ) இரத்த தானம் செய்வது பிறர்நலன் காப்பதற்கு மட்டுமல்ல தன் நலன் காப்பதற்கு மட்டுமல்ல தன்நலன் மேம்படுவதற்கும் உதவும்.

2. தற்போதைய பல்வேறு ஆய்வுகளில் தொடர்ச்சியாக இரத்த தானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று நம்பப்படுகிறது. (Scientists believe that giving blood may prevent heart disease. Although no conclusive evidence is available, numerous physicians have noted that blood donors typically have fewer cases of heart disease than non-donors.  Regular blood donation helps especially males in loosing iron on regular basis. It helps in reducing the chance of heart attack to one third.  )

3. ஹிமோகுளோபின் (இரத்த ஓட்டத்தில் இரும்பின் ) அளவினை கட்டுப்படுத்தவும் சமச்சீராக பராமரிக்கவும் இரத்த தானம் பயன்படுகிறது.

4. இரத்த நன்கொடை ஒருவரின் உயிரை காப்பாற்றியதற்கான அற்புதமான உணர்வைக் கொடுக்கும்.

5. இரத்ததானம் செய்வதன் மூலம் எந்த பின்விளைவுகளும் ஏற்படாது.

த.ஜீவராஜ்

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment