Monday, November 12, 2012

பயனுள்ள சில இணையத்தளங்கள்!


ஆரோக்கியத் தளம்
ஆரோக்கியத் தளம் - மருத்துவ உதவிக் குறிப்புகள்


தமிழ் ,சிங்களம்  ஆகிய  மொழிகளில் மருத்துவ உதவிக் குறிப்புகளை வழங்கும் இணையத்தளம். பயனுள்ள சுகாதாரத்  தகவல்களை அளிப்பதுடன் ஊட்டச்சத்து, தன் சுத்தம், முதலுதவி மற்றும் நோய்கள் பற்றிய தகவல்களுக்கும் இத்தளத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

  இணையத்தள சுட்டி         http://wedananasala.org/home/


 உடல்நலம்
 உடல்நலம்  - வலைத்தளம்

பன்மொழி இணையத்தளமான இது, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் தொடர்பான பயனுள்ள சுகாதாரத்  தகவல்களை கிராமப்புற மக்களுக்கு அளிப்பதன் மூலம் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த முயல்கிறது. ஊட்டச்சத்து, தன் சுத்தம், முதலுதவி மற்றும் நோய்கள் பற்றிய தகவல்களுக்கும் இத்தளத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
  இணையத்தள சுட்டி          http://ta.vikaspedia.in/


கல்லிலே கலைவண்ணம் கண்டோம் - வலைப்பதிவு 

கல்லிலே கலைவண்ணம் கண்டோம்

“கல்லிலே கலைவண்ணம் கண்டோம் ” சிற்பங்களையும் அவற்றின் வரலாற்றுத் தொடர்புகளையும் தமிழ் , ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் ஆராயும் வலைப்பதிவு.
வலைப்பதிவு சுட்டி
http://poetryinstone.in/lang/ta


இது இமாவின் உலகம் - வலைப்பதிவு


திருகோணமலையைச் சேர்ந்த இமா க்றிஸ்(ஆசிரியர்) அவர்களின் வலைப்பதிவு. அனுபவம், பயணக்கட்டுரை, கேக் அலங்காரம், மேசை அலங்காரம், சமையல். வீட்டுத் தோட்டம் , பாடசாலை என்று பல்சுவை நிறைந்த வலைப்பதிவு நியூசிலாந்தில் இருந்து பதிவேற்றப்படுகிறது.

வலைப்பதிவுச் சுட்டி                   http://imaasworld.blogspot.com


கதிரவன் - வலைப்பதிவு 

கதிரவன்

திருகோணமலைப் பிராந்திய செய்திகள் தாங்கி  சி.சசிகுமார்  ( ஆசிரியர், நிருபர், வலைப்பதிவர் ) அவர்களால் பதிவேற்றப்படும் வலைப்பதிவு கதிரவன். திருகோணமலையின் அரசியல், சமூக, சமய, பொருளாதார, கலாச்சார செய்திகளைத் தாங்கி இணையத்தில் வெளிவருகிறது.
கதிரவன் - வலைப்பதிவு சுட்டி  http://kathiravant.blogspot.com/



பொதிகை - வலைப்பதிவு 

பொதிகை - வலைப்பதிவு

ஆன்மீகம்,ஆய்வுகள்,ஓவியங்கள்,சஞ்சிகை வெளியீடுகள்,சிறப்புக் கட்டுரைகள்,சிறுவர் பாடல்கள்,சிறுவர்களுக்கான கதைகள்,பத்திரிகைப் பதிப்புக்கள்,புகைப்படச் சேகரிப்புக்கள்,மனையியல் என்று பல்சுவைகளைத் தாங்கி திருகோணமலையில் இருந்து வரும் வலைப்பதிவு பொதிகை.

பொதிகை - வலைப்பதிவு சுட்டி   http://pothikai.wordpress.com/


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

6 comments:

  1. அனைத்தும் சிறந்த தளங்கள்...

    அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி...

    ReplyDelete
  2. அட... இன்னொரு வலைச்சரம் என்கிற மாதிரி பல பயனுள்ள தளங்களை அறிமுகப்படுத்தி அசத்தியிருக்கீங்க. நன்றி. உங்களுக்கு என் இதயம் நிறைந்த தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. நல்லதொரு உபோயோகமான பகிர்வு.

    அமர்க்களம் கருத்துக்களத்திலும், சித்தவைத்தியம் மற்றும் உடல் நலம் சம்பந்த்தப்பட்ட குறிப்புகள் நிறைய உள்ளது. உலக தமிழர்களின் ஒத்துழைப்போடு இந்த தளம் வெற்றிநடை போடுகின்றது.

    அமர்க்களம் கருத்துக்களம்
    http://www.amarkkalam.net

    ReplyDelete
  4. பயனுள்ள தளங்கள் நன்றி

    ReplyDelete
  5. மிக்க நன்றி

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. முதலில் உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ஜீவன்.

    எல்லாமே பயனுள்ள தளங்கள்தான், இமாவின் உலகம் தவிர. கர்ர்ர்
    ஏதோ பதிவிடுகிறேன் என்பதைத் தவிர அதனால் யாருக்கும் எந்தப் பயனும் இருப்பதாக உணர்ந்ததில்லை நான்.

    ஆனாலும்... நீங்கள் இங்கு பகிர்ந்துள்ளமை பெருமகிழ்ச்சி அழிக்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை. :) என் அன்பு நன்றிகள்.

    குறிப்பிட்டுள்ள தளங்களனைத்தையும் நிச்சயம் படிப்பேன்.

    ReplyDelete