‘ஆயகலைகள் அறுபத்தி நான்கினுள்’ சித்திரம் சிற்பம் போன்ற கலைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகும். கல்லில் கடவுள் உருவங்களைச் செதுக்கும் சிற்பக்கலை சாஸ்த்திர ரீதியானது. பலவிதமான சிறப்பியல்புகளை உடையது.
ஒரு குருவிடம் பக்தி சிரத்தையுடன் சீடனாக நெடுங்காலம் இருந்து கற்றுத் தேற வேண்டிய ஒரு தெய்வீகக் கலையாகும். ஆயினும் தம்பலகாமம் பொற்கேணிக் கிராமத்தில் கிராமசேவையாளராகக் கடமையாற்றிய கலைஞர் திரு.கந்தையா கிருபானந்தன் அவர்கள் சிற்பக்கலையை யாரையும் குருவாகக் கொண்டு கற்காமலே கருங்கல்லில் மிகவும் சிரமம் தரும் தெய்வ உருவமான ஐங்கரக்கடவுளின் திருவுருவை அற்புதமாகச் செதுக்கியிருக்கிறார்.
இவர் கடமையாற்றிய பொற்கேணிக் கிராமத்தில் தம்பலகாமம் விவாகப்பதிவாளர் திரு . க.விஜயநாதன் அவர்களின் வளவில் நின்று நிழல்பரப்பும் ஒரு மரத்தடியில் இவர் செதுக்கிய ‘விநாயகர் ‘பத்திரகாளி’ போன்ற தெய்வ உருவங்கள் காணப்படுகின்றன.
‘யாரிடம் சிற்பக்கலையைக் கற்றீர்கள்?’என்று கேட்டபோது ‘இங்கு யாரிடம் இந்தக்கலையைக் கற்க முடியும்?’ என்று கேட்டுவிட்டுச் சிரிக்கிறார். ‘சிற்பக்கலையை எப்படிக் கற்றீர்கள் எனக் கேட்டீர்களே எல்லாம் நான் குலதெய்வமாகப் போற்றி வணங்கிவரும் சம்மாந்துறை ஸ்ரீ முத்துமாரியம்மனின் அருள்தான்’எனக்கூறுகிறார்.
இவர் தம்பலகாமம் கள்ளிமேடு தெற்கில் வாழ்ந்த விதானையார் கந்தையாவின் மூத்த மகனாவார். சம்மாந்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தர்மகர்த்தா சபைத்தலைவராக நீண்டகாலம் கடமையாற்றியுள்ளார்.
தனது ஆரம்பக்கல்வியை தம்பலகாமம் மகா வித்தியாலயத்தில் தொடங்கிய இவர் திருகோணமலை இந்துக்கல்லூரியில் தொடர்ந்து கற்றார். கல்வி கற்ற காலத்தில் சித்திரம் வரைவதில் சிறந்து விளங்கினார். இவரால் வரையப்பட்ட ஆதிகோணேஸ்வரரின் வர்ண ஓவியம் தம்பலகாமம் ஆதிகோணேஸ்வரரின் ஆலயத்தில் கர்ப்பக்கிரகத்தின் முன் திரையாக வன்முறைக் குழப்பங்கள் உச்ச நிலையையடைந்து மக்கள் ஊரைவிட்டு வெளியேறும்வரை இருந்தது.
கலைஞர் கந்தையா கிருபானந்தம் அவர்கள் வில்லுப்பாட்டு நிகழ்சிகளிலும், பழக்காமல் திடீர் என்று மேடையேற்றும் நாடகங்களில் நகைச்சுவைப் பாத்திரங்களில் தோன்றி நடித்து இரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைப்பதிலும் வல்லவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தம்பலகாமம் க.வேலாயுதம்.
( 05.03.1995 )
அறிந்து கொள்ள வைத்தமைக்கு நன்றி...
ReplyDeleteநன்றி தனபாலன் அவர்களே.
Deleteஇலைமறை காயாக இருக்கும் அற்புதக் கலைஞரொருவரின் திறமையை வெளி உலகின் பார்வைக்குக் கொண்டுவரும் விதமான இந்த இடுகையை வரவேற்கிறேன் ஐயா.
ReplyDeleteமுடியும்போது திரு. வியஜநாதன் அவர்கள் வளவில் இருக்கும் அந்தச் சிற்பங்களையும் படம் பிடித்துப் பகிர்வீர்களா!
அந்தச்சிலைகள் ஆலயங்களில் பிரதிஜ்டை செய்யப்பட்டுள்ளன. முடியுமானால் புகைப்பட மெடுத்து போடுகிறேன். நன்றி.
Deleteஎனது இதயங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்க வளமுடன்.
கொச்சின் தேவதாஸ்
Thank You.
DeleteNice blog Check mine too
ReplyDeleteKnow The Answer
சிற்பக் கலைஞரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி
ReplyDeleteஇனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
Thank you Doctor
ReplyDelete