Sunday, October 07, 2012

முல்லை அமுதனின் காற்றுவெளி இலக்கிய சஞ்சிகை

முல்லை அமுதன்

முல்லை அமுதன் (இரத்தினசபாபதி. மகேந்திரன், கல்வியங்காடு, யாழ்ப்பாணம்,  இலங்கை)  ஈழத்து எழுத்தாளர். புலம் பெயர்ந்து பிரித்தானியாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

முல்லைஅமுதன் அவர்கள் திருகோணமலை பெருந்தெரு தமிழ்க் கலவன் பாடசாலை, யாழ்/செங்குந்தா இந்துக் கல்லூரி, கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம், மானிப்பாய் இந்துக் கல்லூரி, ஆகியவற்றில் தன் கல்வியைத் தொடர்ந்தவர்.
நித்தியகல்யாணி, புதிய அடிமைகள், விடியத் துடிக்கும் ராத்திரிகள், விழுதுகள் மண்ணைத்தொடும், ஆத்மா, யுத்த காண்டம், விமோசனம் நாளை, பட்டங்கள் சுமக்கின்றான், சிநேகம், யாகம், இசைக்குள் அடங்காத பாடல்கள், இலக்கியப்பூக்கள் போன்ற நூல்களுடன், தாமரைத்தீவானின் மொழிநூறு,சுதந்திரன் கவிதைகள் நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

வருடாந்தம் ஈழத்து நூல் கண்காட்சிகளை நடாத்துவதுடன், ஈழத்து நூல்களை ஆவணப்படுத்தியும் , காற்றுவெளி இலக்கிய சஞ்சிகையை நடாத்தியும் வருகிறார்.  இவருக்கு இங்கிலாந்து ரூட்டிங் முத்துமாரியம்மன் கோவில் அறங்காவலர் குழுவினரால் முத்தமிழ் விழாவில் (14/04/2012) 'பைந்தமிழ்க் காவலர்' எனும் பட்டமளித்துக் கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


த.ஜீவராஜ்

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment:

  1. அறியாத தகவல்கள்... நன்றி...

    பகிர்கிறேன்...

    ReplyDelete