திருகோணமலை செய்திகளைத் தாங்கி வாரம்தோறும் பிரசுரமாகும் மலை முரசின் 10 வது ( 30.09.2012) இதழ் வாசிக்கக் கிடைத்தது. மலைமுரசு தொடர்பான சில தகவல்கள்.
மலை முரசு - ஆசிரியர் பக்கம்
( July 29,2012)
வணக்கம்மலைமுரசின் ஊடாக உங்களுடன் பேசமுனையும் முதல் சந்தர்ப்பம் அமைவது மிகுந்த மனநிறைவையும், மட்டற்ற மகிழ்ச்சியையும் தருகின்றது. இப் பத்திரிகையொன்றும் எமது நீண்டகாலக் கனவின் நனவுத் தோற்றமோ அல்லது எமது வாழ்வின் இலட்சியமோ அல்ல. ஆனால் இவ் வெளியீடு இக்காலத்தின் தேவையாக இருக்கின்றது என்பதும், நிரப்ப வேண்டிய மிகப்பெரும் இடைவெளியொன்றினை நிரப்பவென எழுப்பப்படும் கட்டுமானத்தின் ஓர் கல்லாக அமைகின்றது என்பதும் கண்கூடு.
நாம் கடந்துபோன பலநாட்களில் மிக அண்மையில் என்றோ ஓர் நிமிடம் உள்ளூர் பத்திரிகையொன்றின் தேவையை எமக்கு உணர்த்திற்று. அதன் அசைவியக்கமாக உங்கள் கைகளிலிருப்பதே மலைமுரசு ஆகும்.
இம்முரசின் அறைவு இன்று தொடங்கி உங்களின் விழியூடு செய்திகளை இயம்பும் பணியைத் தொடங்குகின்றது. மலைமுரசின் பொறுப்பை அது நன்றாகவே உணர்ந்துள்ளது. சுதந்திரமான, பக்கச்சார்பற்ற உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை உங்களிடம் எடுத்து வரும் கடமைமையையும் மலைமுரசு கொண்டுள்ளது.
உங்களின் பொறுப்பு யாதெனில் வாசகனாக மட்டுமே நீங்கள் இருக்காமல்
தேவையேற்படும் போது மலைமுரசின் பத்திரிகையாளனாகவும் மாறவேண்டும் என்பதாகும். அதன்பால் உங்கள் பிரதேசச் செய்திகளை எமக்குத் தெரியப்படுத்தும் சேவையை நீங்களாகவே ஏற்றுக்கொள்வீர்கள் என மலைமுரசு நம்பிக்கை கொள்கின்றது.
ஒரு வரலாற்றுக் காலத்தை மலைமுரசு தாண்டும் நந்நாளில் நிச்சயமாக உங்களை முன்பக்கத்திற் சந்திக்கும் வரை……
அன்புடன்
ஆசிரியர்.
மலை முரசு.
July 29 , 2012
அறிவிப்பு
"எல்லைக்கல்" எங்கள் வரலாறு சொல்லும் பக்கம்!!! உங்கள் ஊரின் ,உங்கள் ஊரில் இருந்த நபர்களின் ,உங்கள் ஊரில் உள்ள ஓர் இடத்தின் வரலாற்றை சொல்லுங்கள் !!! - ஆசிரியர்.மலை முரசு.
தொடர்புகளுக்கு
159A,2வது மாடி ,
கடல் முக வீதி ,
திருகோணமலை.
malaimurasu@hotmail.com
மேலதிக விபரங்களுக்கு facebook பக்கத்தில் தொடர்பு கொள்ளவும். - ஆசிரியர்.மலை முரசு.
14.09.2013
த.ஜீவராஜ்
No comments:
Post a Comment