Wednesday, September 19, 2012

பாடம் பயில வாருங்கோ! - சிறுவர் பாடல்

பாடம் பயில வாருங்கோ

மாணாக்கரே! மாணாக்கரே!
வந்து கேளுங்கோ! உங்கள்
வாழ்வு மலர வழிகள் சொல்வேன்
கேட்டுச் செல்லுங்கோ!


மனித இயல்பை மாற்றுகின்ற
‘மாயங்கள்’ சொல்வேன்
இனியு மென்ன தயக்கமேன்?
எழுந்து வாருங்கோ!

முயற்சியாலே மனித வாழ்வு
முன்னேற வேண்டும்
இகழ்சியில்லை தயக்கமேன்?
இதனைக் கேளுங்கோ!


இளமையிலே கல்வியை
இனிதுறக் கற்போம்
பழக்கம் நல்ல தாயின்
படிந்திடும் கல்வி

வாழ்க்கைதனை நல்ல முறையில்
வாழ்ந்திடக் கற்போம்
இயற்கை புகட்டும் பாடங்களை
ஏற்று மகிழ்வோம்.

‘மனதை’ நல்ல வழிகளில்
மயங்கிடச் செய்வோம்
புனிதமாகும் நம் வாழ்வு
புரிந்து கொள்ளுங்கோ!

‘பயிற்சி’ யொன்றே மனிதனைப்
பலம் பெறச்செய்யும்
‘பயிற்சி’யாலே ஆற்றல்களைப்
பயின்றிட வாங்கோ!

அறிவுத் திறனை அடைந்திட
பயிற்சிகள் செய்வோம்
மகிழ்சியாக வாழ்வதற்கு
வழிமுறை காண்போம்.

அதிகாலை எழுந்திடுவோம்
ஆய்வுகள் செய்வோம்
விதியெம்மை அணுகாது
விருப்புடன் வாழ்வோம்.

‘பண்பட்ட’வயல்களிலே
பயிர்கள் செழிக்குமே!
பண்பட்ட மனத்தோடு
பயில வாருங்கோ!

வே.தங்கராசா.

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment