அமைவிடம் -வெருகல் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் திருகோணமலை , மட்டக்களப்பு மாவட்டங்களின் எல்லையில் மகாவலி கங்கையின் கிளை நதியான வெருகல் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.
Tuesday, September 25, 2012
Sunday, September 23, 2012
நள்ளிரவில் அவளுக்குக் கிடைத்த துணைவன்
இரவு பதினொரு மணி பௌர்ணமிக்கு முதல்நாள் ஆகையால் நிலவு பகலாய்க் காய்ந்து கொண்டிருந்தது. நித்திரை வராததால் சித்திரா பாயில் புரண்டுகொண்டு கிடந்தாள்.சித்திராவின் இளம் மனதைப் பலவிதமான இன்ப துன்ப நினைவுகளும் யோசனைகளும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன.
Thursday, September 20, 2012
திருகோணமலை பொது வைத்தியசாலை அருள்மிகு அரசடி சித்திவிநாயகர் நகர்வலம் - புகைப்படங்கள்
திருகோணமலை பொதுவைத்தியசாலை அருள்மிகு அரசடி சித்திவிநாயகர் ஆலய ஆவணி சதுர்த்தி விழா 19.09.2012 புதன்கிழமை மாலை சிறப்புற கொண்டாடப்பட்டது.
Wednesday, September 19, 2012
Monday, September 17, 2012
கலாபூசணம் ‘வயலின் வித்துவான்’ அமரர் திரு.வே.சங்கரலிங்கம்
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையில் ‘பருத்தியடைப்பு’என்னும் பகுதியில் சாதாரண தொழிலாளர் குடும்பம் ஒன்றில் 1922 ஆம் ஆண்டு பிறந்தவர்தான் நமது கலாபூசணம் ‘வயலின் வித்துவான்’ அமரர் திரு.வே.சங்கரலிங்கம் ஐயா அவர்கள். ஆரம்பக் கல்வியை கரம்பன் சண்முகநாதன் வித்தியாலயத்திலும் பின்னர் திருநெல்வேலி முத்துத் தம்பி வித்தியாலயத்திலும் கற்ற இவர் எட்டாம் வகுப்புடன் பாடசாலைக்கல்விக்கு ‘முழுக்குப் போட்டு’விட்டு கலைத்துறையில் ஈடுபடலானார்.
தனது சொந்த மாமா திரு.கே.கே.குமாரசுவாமி அவர்களிடமும், இந்தியாவில் இசைக்கல்வி பயின்று இலங்கை வந்து ஊர்காவற்துறையில் பருத்தியடைப்பு என்னும் இடத்தில் இசையாசிரியராகக் கடமையாற்றிய தனது சித்தப்பாவான திரு.தில்லையம்பலம் அவர்களிடமும் வயலின் கற்றுக்கொண்டார். இவ்வாறு தொடர்ந்து ஒரு வருடகாலத்திற்கும் மேலாக வயலின் கற்றுக்கொண்ட இவர் வயலினைத் துறைபோகக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவாவினால் 1938 ஆம் ஆண்டு இந்தியா பயணமானார். மதுரையில் இரண்டு வருடங்களும் நாகர் கோயிலில் ஆறு வருடங்களும் இவர் வயலின் கற்றுக்கொண்டார்.
Tuesday, September 11, 2012
Sunday, September 02, 2012
திருகோணமலை மாவட்டத்தின் ஆலங்கேணி என்னும் அழகிய கிராமம்
திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூன்று பற்றுக்களில் மத்திய பற்றான தம்பலகாமத்திலிருந்து கிழக்கே எட்டு மைல் தூரத்திலுள்ளது ஆலங்கேணி என்னும் அருமையான கிராமம். ஒரு மணல் பிரதேசமாக இந்த ஊர் காணப்படுகிறது. “ஆலங்கேணி மணல்” என்பது இப்பிரதேசத்தில் மிகவும் பிரசித்தமான ஒரு விடயமாகும்.
தொழில் செய்ய முடியாத நிலப்பகுதி என்று கூடக் கூறலாம். ஆனால் பாட்டாளிகளான இவ்வூர் மக்கள் தங்களுக்கென ஒரு தொழிலை சிருஸ்டித்து ஓயாமல் உழைத்துத் தங்கள் வாழ்வை வளமாக்கிக் கொண்டது குறிப்பிடத் தக்கதாகும். இந்தக் கிராமத்தில் ஒரு பெரிய ஆலமரமும் அதனருகே தாமரைக்கேணியும் இருப்பதால் காரணப் பெயராக “ஆலங்கேணி” என்று பெயர் அமைந்ததாகக் கருதப்படுகிறது.
இங்கு ஏறக்குறைய எண்ணூறு குடும்பங்கள் வரை வாழ்கின்றனர். இவர்கள் அனைவரும் தமிழர்கள். வடக்கே உள்ள கிண்ணியாவிலிருந்து வீதிகளில் கல்பரப்பி ஆலங்கேணி மணலை அடக்கி வடக்குத் தெற்காக வீதிகள் செப்பனிடப்பட்டுள்ளன.

Subscribe to:
Posts (Atom)