
பாடு தம்பி பாடு
பைந்தமிழில் பாடு
வீடு செல்வம் வேண்டும்
வியர்வை சிந்தத்தேடு
நாடு தம்பி நாடு
நம் உயிரினிய நாடு
காடு நீக்கி கழனியாக்கிக்
காணவேண்டும் ஓடு
தேடு தம்பி தேடு
திரவியங்கள் தேடு
ஏடு போற்றி வாழ நல்ல
இலக்கியங்கள் தேடு
சாடு தம்பி சாடு
சாதிப்பேயைச் சாடு
பாடு பட்டால் உண்டு வாழ்வு
பார் புகழப் பாடு
ஓடு தம்பி ஓடு
உயர்வு பெற ஓடு
கேடு இல்லா வாழ்க்கையோடு
கீர்த்தி புகழ் தேடு.
வே.தங்கராசா
No comments:
Post a Comment