உணவு தேடிக் காக்கையார்
ஊரைக் கூட்டி உண்ணுவார்
பணத்தைத் தேடி மனிதர் நாம்
பதுக்கி வைத்து வாழ்கிறோம்.
பாலில் நீரை நீக்கியே
பருகவல்லார் அன்னத்தார்
மாவில் கலப் படங்கள் செய்து
மற்றவர்க்குக் கொடுக்கிறோம்.
தேடி அலைந்து சத்துணவைத்
தேனீ நமக்குத் தருகிறார்
நாடி நாம் மற்றவர்க்கு
நன்மை புரிய முயன்றிலோம்.
வயலைப் பூச்சி அழித்திடாமல்
வெட்டுக்கிளியார் உதவுவார்
மயிலைப் பிடித்து சிறகொடித்து
மகிழ்ந்து நாமும் வாழ்கிறோம்.
பாலைத் தந்து நமதுடலைப்
பசுவார் பேணி வளர்க்கிறார்.
ஆடு மாடு விரும்பியுண்ணும்
அறிவிலியாய் வாழ்கிறோம்.
இரக்கம் நமது உள்ளத்தில்
இருக்க வேண்டும் தம்பிகாள்
சுரக்கும் அருள் இறைவனும்
தோன்றி நமக்கு அருளுவார்.
வே.தங்கராசா
ரேணுகா ஸ்ரீநிவாசன்August 20, 2009 2:49 AM
ReplyDelete"இரக்கம் நமது உள்ளத்தில்
இருக்க வேண்டும் தம்பிகாள்
சுரக்கும் அருள் இறைவனும்
தோன்றி நமக்கு அருளுவார்."
அருமையான கருத்தினை மிகவும் அழகாகவும் எல்லோருக்கும் விளங்கும் வகையில் எளிமையாகவும் முன் வைத்துள்ளீர்கள்.
நன்றி.
ReplyDelete
வே.தங்கராசாAugust 23, 2009 7:15 AM
மேலும் எழுதுவதற்கு மெருகூட்டுகிறது உங்கள் கருத்துகள் நன்றி.
ReplyDelete