கல்வியை முடித்து வெளியேறும் மாணாக்கர்களுக்கு வேதகால ஆசிரியர்கள் பத்துக் கட்டளைகளை அறிவுறுத்தியுள்ளனர்.
அவையாவன.
1. உண்மையைக் கடைப்பிடி.
2. நேர்மையாய் இரு.
3. நன்மைதரும் செயல்களில் ஈடுபடு.
4. செல்வத்தைத் தேடு.
5. இறைவனையும் முன்னோரையும் வழிபடு.
6. பெற்றோர் பிறர் நலனில் அக்கறை கொள்.
7. கற்றலையும் கற்பித்தலையும் கைக்கொள்.
8. அல்லலை அகற்றி நல்லவை செய்.
9. முழுமனதுடன் அறவழியில் மனித நேயமுடன் வாரி வழங்கு.
10.வாழ்க்கையில் சவால்களை எதிர் கொள்.
வே.தங்கராசா
Renuka SrinivaasanSeptember 7, 2009 4:37 AM
ReplyDeleteஓராண்டு நிறைவைக் கொண்டாடும் தங்கநிலா தொடர்ந்து ஒளி விட்டுப் பிரகாசிக்க வாழ்த்துகிறேன். தற்போதைய காலத்திற்கும் இப்பத்துக் கட்டளைகளும் பொருந்துவனவாகவே உள்ளன. ஆனால் அன்று குருவின் வாக்கிற்குக் கொடுத்த மரியாதையும் பணிவும் இன்றுள்ள மாணவர்களிடையே அரிதாகவே காணப்படுகிறது. இன்றுள்ள ஆசிரியர்கள் பாவம்.