Thursday, August 02, 2012

சிந்தனையைப் போற்றுவோம்


காக்கை ஒன்று மரத்திலே
முட்டை விட்டுக் காத்தது
பார்த்துப் பாம்பு ஒன்று வந்து
கொத்திக் குடித்துக் சென்றது.


வேளை தோறும் நடக்கும் இந்த
வேதனையைத் காக்கையார்
மூளை கொண்டு தடுத்திட
முயன்று வெற்றி கொண்டனர்.

அந்த நாட்டு மன்னனின்
அருமை மனைவி குளிக்கையில்
நல்ல தருணம் பார்த்துக் காகம்
நகைகையக் கௌவிச் சென்றது

அரசி நகையைக் காக்கையார்
அந்தப் பொந்தில் போட்டனர்
விரைந்து வந்த வீரர்கள்
மரத்தைத்தறித்து வீழ்த்தினர்

பொந்தில் இருந்த பாம்பனார்
பொங்கி எழுந்து சீறினார்
அந்த வேளை வீரர்கள்
அரிந்து பாம்பைக் கொன்றனர்.

புத்தியாலே காகம் இந்தப்
புதுமைதனைச் செய்தது
சித்தி கொள்ள நாமுமந்த
சிந்தனையைப் போற்றுவோம்.

வே.தங்கராசா


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment