
இந்து, யேசு, புத்தர், என்று
எதற்குச் சண்டை தோழரே
இறைவன் ஒன்று என்னும் தீபம்
ஏற்ற வேண்டும் எங்குமே
மதங்கள் மூலம் பகைமையை
மனிதர் வளர்த்துக் கொண்டனர்
உதங்கர் போன்ற ஞானிகள்
உண்மை உணர்ந்து உயர்ந்தனர்
உள்ள தெய்வம் ஒன்றெனும்
உணர்வு வேண்டும் நம்மிடம்
கள்ள மனதை வென்று நாம்
கருணை பொங்க வாழ்வோமே
மனிதசேவை தன்னையே
மதங்கள் யாவும் போற்றுமே
புனித சேவை புரியவே
பூணவேண்டும் விரதமே
இந்து என்றும் இஸ்லாம் என்றும்
எதற்குச் சண்டை நம்மிலே
முந்துவோமே பணி செய்ய
முழு மனிதராகுவோம்.
வே.தங்கராசா
No comments:
Post a Comment