Thursday, August 02, 2012

அன்பு


அன்பு செய்வோம் பிள்ளைகாள்
ஆகா ஓடி வாருங்கள்
அன்பு தெய்வ மாகுமே
அதனை அறிந்து போற்றுவோம்


அன்பு செய்து பாருங்கள்
அகங்காரம் அழிந்திடும்
அன்பு ஒன்றே உலகிலே
ஆற்றல் மிக்க ஆயுதம்
அன்பை வெல்லும் கருவிகள்
அகில மெங்கும் இல்லையே
அன்பே நம்மைக் காத்திடும்
அதனைப் போற்றி வாழ்வமே
உயிர்கள் மீது அன்பினை
உணர்வு பொங்க செலுத்துவோம்
உயிர்கள் எல்லாம் ஒன்றென
உணர்ந்து போற்றி மகிழுவோம்

அன்பும் அறனும் வேறென
அறிவிலாதார் செப்புவர்
அன்பே தெய்வம் ஆதலால்
அதனைப் போற்ற வேண்டும் நாம்

அன்பும் அறனும் உடையதே
ஆற்றல் மிக்க வாழ்க்கையாம்
அன்பு கொண்டு வாழுவோம்
அதுவே நமக்கு நல்லதாம்

அன்பு தெய்வம் என்பதை
அறிந்து போற்றி வாழுவோம்
அன்பினாலே அனைத்தையும்
அடைந்திடலாம் பிள்ளைகாள்

அன்பிலாதார் வாழ்க்கையை
அறவோர் இகழ்ந்து அகற்றுவர்
அன்பினாலே அனைத்தையும்
ஆக்க முடியும் பிள்ளைகாள்

அன்பு செய்து பாருங்கள்
அன்பு நம்மைக் காத்திடும்
அன்பே கடவுள் ஆதலால்
அன்பைப் போற்றி வாழுவோம்


வே.தங்கராசா

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment: