இரண்டும் ஒன்றும் மூன்று எங்கள்
இனிய தமிழ் மூன்று
மூன்றும் ஒன்றும் நான்கு நல்
மறைகள் உலகில் நான்கு
நான்கும் ஒன்றும் ஐந்து ஒரு
கையில் விரல்கள் ஐந்து
ஐந்தும் ஒன்றும் ஆறு திருக்
குமரன் முகங்கள் ஆறு
ஆறும் ஒன்றும் ஏழு இதை
அறிந்து கொண்டு வாழு
ஏழும்ஒன்றும் எட்டு
எங்கே எனக்கு லட்டு
எட்டும் ஒன்றும் ஒன்பது
நவ ரத்தினங்கள் ஒன்பது
ஒன்பதும் ஒன்றும் பத்து
இராவணன் தலைகள் பத்து.
எண்ணும் எழுத்தும் உலகில்
என்றும் நிலைத்து வாழும்
கண்ணும் கருத்து மாக இதைக்
கற்று உயர்வு காண்போம்
கணிதம் என்ற பாடம்
கற்று உலகில் தேற
துணிவு வேண்டும் மகனே!!
துயரங் கொள்ள வேண்டா.
எண்ணம் வலிமை பெற்றால்
எழுச்சி யுண்டு மகனே!
எண்ணத்தாலே எதையும்
எழுதில் கொள்ள முடியும்
மனதில் வலிமை சேர்ந்தால்
மகிழ்ச்சி உண்டு மகனே!
சினத்தை விட்டு நீயும்
சிரத்தையோடு கற்ப்பாய்
எண்ணும் எழுத்தும் உலகில்
ஏற்றம் காணச்செய்யும்
கண்ணின் மணியே நீயும்
கற்று உயர்வு காண்பாய்.
வே.தங்கராசா
அண்ணாமலையான்January 30, 2010 7:45 AM
ReplyDeleteநல்லாருக்கு சார்..
ReplyDelete
அக்பர்January 30, 2010 11:01 AM
அறிந்துகொள்ள வேண்டியவை.
ReplyDelete
வே.தங்கராசாFebruary 14, 2010 8:14 AM
நன்றி அண்ணாமலையான் அவர்களே.தங்களைப் போன்றவர்களின் கருத்துகள் என்னை மேலும் உற்சாகப்படுத்தி எழுத்தத்தூண்டும்.
ReplyDelete
வே.தங்கராசாFebruary 17, 2010 3:54 AM
நன்றி அக்பர்
அருமையான சிறுவர் பாடல். பாராட்டுக்கள்.
ReplyDeleteநன்றி இமா அவர்களே.
Delete