
கப்பல் துறை எங்கள் துறை
கன்னித் தமிழர் வாழ்ந்த துறை
கலம் செலுத்தி தமிழ் இளைஞர்
காவியம் படைத்த துறை
சரசோதி மாலை என்னும்
சாஸ்திர நூல் தந்த துறை
சரித்திரப் புகழ் வாய்ந்த
தம்பையின் கப்பல்துறை
பழம் பெருமை கொண்ட எங்கள்
பார் புகழும் தம்பை நகர்
வளம் பெருகச் செய்த துறை
வள மார்ந்தகப்பல் துறை
பார் புகழும் தம்பை நகர்
வளம் பெருகச் செய்த துறை
வள மார்ந்தகப்பல் துறை
பதினோராம் நூற்றாண்டில்
பராக்கிரம பாகு என்பான்
கரந்துறைந்து வாழ்ந்த துறை
கழனி சூழ் கப்பல்துறை.
முத்துக் குளித்த துறை
முத்தமிழ் வளர்த்த துறை
வித்தகர் பலர் சேர்ந்து
வெற்றியுடன் வாழ்ந்த துறை.
பராக்கிரம பாகு என்பான்
கரந்துறைந்து வாழ்ந்த துறை
கழனி சூழ் கப்பல்துறை.
முத்துக் குளித்த துறை
முத்தமிழ் வளர்த்த துறை
வித்தகர் பலர் சேர்ந்து
வெற்றியுடன் வாழ்ந்த துறை.
பாண்டியன் ஆண்ட துறை
பல்கலையும் செழித்த துறை
மாண்புறு தமிழரன்று
மகோன்னதமாய் வாழ்ந்த துறை
அரசுகளின் போர் வெறியால்
அன்றழிந்த கப்பல் துறை
தரணியிலே சிறந்த துறை
தம்பை தந்த கப்பல்துறை
வளமார்ந்த எங்கள் துறை
வரலாற்றை நாமறிவோம்
உளமார்ந்த மகிழ்ச்சியுடன்
ஊர் பேரைப் போற்றிடுவோம்.
பல்கலையும் செழித்த துறை
மாண்புறு தமிழரன்று
மகோன்னதமாய் வாழ்ந்த துறை
அரசுகளின் போர் வெறியால்
அன்றழிந்த கப்பல் துறை
தரணியிலே சிறந்த துறை
தம்பை தந்த கப்பல்துறை
வளமார்ந்த எங்கள் துறை
வரலாற்றை நாமறிவோம்
உளமார்ந்த மகிழ்ச்சியுடன்
ஊர் பேரைப் போற்றிடுவோம்.
வே.தங்கராசா
No comments:
Post a Comment