அம்மா எங்கள் அம்மா
அன்பு காட்டும் அம்மா
சும்மா என்னைத் தூக்கி
துயரம் போக்கும் அம்மா.
எண்ணும் எழுத்தும் பயின்றிட
எம்மை ஊக்கும் அம்மா
கண் போல் எம்மைக் காக்கும்
கருணை நிறைந்த அம்மா.
காலை எழுந்து எமக்கு
கணக்காய் உணவு தருவார்
மாலை நல்ல கதைகளை
மகிழ்ச்சியோடு சொல்லுவார்.
ஒழுக்க முள்ள மனிதராய்
உயர்ர்ந்து வாழ எம்மைப்
பழக்கும் நல்ல அம்மா
பாசம் மிகுந்த அம்மா.
பத்து மாதம் சுமந்து
பாலும் சோறும் தந்து
நித்தம் எம்மைக் காக்கும்
நெஞ்சில் நிiறைந்த அம்மா.
அம்மா எங்கள் முதற் தெய்வம்
அறிய வேண்டும் நாமெல்லாம்
அம்மா காட்டும் தெய்வமே
ஆற்றல் மிக்க நம் பிதா.
மாதா பிதா தெய்வமென்று
மகிழ்ந்து பாடிச் சொல்லுவோம்
மாதா பிதா நிழலில்
மகிழ்ச்சியோடு வாழுவோம்.
வே.தங்கராசா
இப்படி ஒரு அருமையான எளிமையான
ReplyDeleteகருத்துள்ள கவிதையைப் படித்து வெகு நாட்களாகிவிட்டது
தங்கள் கவிதை கவிஞர்.அழவள்ளியப்பாவை
நினைவுறுத்திப்போனது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
தங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்கு நன்றி திரு.றமணி அவர்களே
ReplyDeleteஅருமை வரிகள்... சிறப்பான கவிதை...
ReplyDeleteவாழ்த்துக்கள்... நன்றி ஐயா...
நன்றி தனபாலன் அவர்களே.
ReplyDelete