Wednesday, August 22, 2012

புரிந்து உலகில் வாழுவோம்

Children-song

பந்து விளையாடலாம்
பாய்ந்து ஓடி வாருங்கள்
சிந்துகின்ற வியர்வையில்
தேகம் பல மாகுமே!


மாலை விளையாடி நாம்
மகிழ்ச்சியோடு வாழுவோம்
தேவை நமக்கு உடல் நலம்
தேகப் பயிற்சியும் செய்யலாம்

உடலில் உறுதி உள்ளவர்
ஊக்கத்தோடு உழைத்திட்டால்
கடலைக் கூட நீந்தியே
கரையைக் காண முடியுமே.

சுவர் இருந்தால் சித்திரம்
சோக்காய் வரைய முடியுமே
நமதுடலைப் பேணுவோம்
நாமும் வாழ்ந்து காட்டுவோம்.

மனதில் உறுதி இருந்திட்டால்
வானில் கூடப் பறக்கவாம்
இதனைப் புரிந்து வாழ்ந்திட்டால்
ஏற்றம் புகழ் சேருமே!

எண்ணம் நல்ல எண்ணமாய்
இருக்க வேண்டும் பிள்ளைகாள்
வண்ணம் பெற்று வாழலாம்
மகிழ்ந்து உலகில் சிறக்கலாம்.

செய்ய முடியும் என்று நாம்
தீரராகச் செப்புவோம்
வெல்ல முடியும் விதியையும்
வேங்கை போல வாழலாம்.

நம்மிலுள்ள குறைகளை
நாமே உணர்ந்து நீக்குவோம்
தம்மை நம்பி வாழ்வோரே
தரணி போற்ற வல்லவர்.

முன்னர் வாழ்ந்த மக்களின்
மூதுரைகள் கேட்டு நாம்
இன்பமாக வாழ்ந் திங்கே
இன்னல் நீக்கி வாழலாம்

கண்ணின் மணிச் செல்வங்காள்
கருத்து ஒன்று கேளுங்கள்
விண்ணில் தாவிப் பறக்கலாம்
வேறுலகும் செல்லலாம்

எதையும் செய்ய முடியும் நாம்
இதயம் அதில் தோய்ந்திட்டால்
புதையல் போன்ற உண்மையைப்
புரிந் துலகில் வாழுவோம்.

வே.தங்கராசா


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

2 comments:

  1. அருமை... அருமை...

    சிறப்பான கருத்துக்கள்....

    வாழ்த்துக்கள் ஐயா... நன்றி...

    ReplyDelete
  2. xA;t NGW;W GPD;DU;JHD;
    xA;TPY;YHj VoJPlK;
    j}A TS;SJ; JPuKFD;
    CAU; TQ;F UHRDHU;

    ReplyDelete