Tuesday, August 28, 2012

உயர்ந்த மனிதன் ஆகலாம்

tamil children songs

உலகிலுள்ள இயற்கையில்
உயர்ந்த பண்பு உண்டு பார்!
உணர்ந்து நீயும் கைக்கொண்டால்
உயர்ந்த மனிதன் ஆகலாம்.

Sunday, August 26, 2012

நாடகக்கலைஞர் இராமலிங்கம் இரத்தினசிங்கம்

Ramalingam Ratnasingam


திருகோணமலை மாவட்டத்தில் சேனையூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர் திரு.இ.இரத்தினசிங்கம் என்னும் நாடகக் கலைஞர்.  தி.சேனையூர் மத்தியகல்லூரியில் ஆரம்ப வகுப்புமுதல் க.பொ.த.சாதாரண தரக்கல்வியையும் மட்.சிவானந்தா வித்தியாலயத்தில் க.பொ.த.உயர்தரக்கல்வியையும் யாழ்.கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் ஆசிரிய பயிற்சியையும் முடித்த இவர் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கலைமானிப் பட்டத்தையும் பெற்றவராவர்.

கல்வி கற்கும்காலத்தில் நாடகத்துறை,கவிதை,சிறுகதை போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக விளங்கினார். நாடகத்துறையில் வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய திரு.எஸ்.அருளானந்தம் அவர்களும், எழுத்துத் துறையில் திரு.வ.அ.அவர்களும் இவருடைய மதிப்பிற்குரிய குருமாராவார்கள்.

Wednesday, August 22, 2012

புரிந்து உலகில் வாழுவோம்

Children-song

பந்து விளையாடலாம்
பாய்ந்து ஓடி வாருங்கள்
சிந்துகின்ற வியர்வையில்
தேகம் பல மாகுமே!

Tuesday, August 21, 2012

சதிபதிகள் ஒற்றுமையாய் வாழலானார்

குடும்பம்

திருமணம் செய்து கொண்டால் வாழ்விலுள்ள
சிரமங்கள் குறைந்து விடும் என்று எண்ணி
முருகேசன் வள்ளியம்மை கரம் பிடித்து
முழுசாக ஒரு வருடம் ஆகு முன்பே
தீராத மனக்கவலை சதிபதிக்குள்
சிறு சண்டை சச்சரவு வாக்கு வாதம்
வாராத நாட்களில்லை அக்கம் பக்க
மக்களெலாம் கூடிநின்று புதினம் பார்ப்பார்.

Monday, August 20, 2012

அம்மா

amma

அம்மா எங்கள் அம்மா
அன்பு காட்டும் அம்மா
சும்மா என்னைத் தூக்கி
துயரம் போக்கும் அம்மா.

Tuesday, August 14, 2012

கந்தளாய்க் குளத்து மகா வேள்வி

 திருமலை

 தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில் திறந்த வெளிச்சுற்று வழிபாடுகளில் தலையாயது கந்தளாய்க் குளத்து மகாவேள்வியாகும். கந்தளாய் நீர்த்தேக்கத்தை நிறைக்கும் கங்கைபோன்ற ‘பொட்டியனாற்று’ ஓரம் உள்ள ‘கால்நாட்டு மண்டபம்;’ என்னும் இடத்தில் மேள தாள சீர்களுடன் ‘கன்னிக்கால்’ நட்டு பல கொட்டகைகள் அமைத்து நாராயண மூர்த்திக்கும் இலட்சுமி தேவிக்கும் திருமண வைபவமாகப் நடைபெறும் மாபெரும் அருவ வழிபாடாக இது விளங்குகிறது.

Monday, August 13, 2012

எங்கள் ஆசான்


எங்கள் ஆசான்

எங்கள் ஆசான் இனியவர்
எதற்கும் அஞ்சா நெஞ்சினர்
கண்கள் போலும் கல்வியைக்
கற்றுத் தரும் பண்பினர்

Wednesday, August 08, 2012

பரதவிக்கும் காலம் வரும்!


மண்ணாசை பொன்னாசை மயக்கம் வந்தால்
மனிதனின் பகுத்தறிவு மழுங்கிப் போகும்
எண்ணாத செயல்களையும் எண்ணும் நெஞ்சு
இழிசெயல்கள் புரிவதற்கும் துணிவுண்டாகும்
கண்ணாக தினம்போற்றி மதித்துவந்த
காரியங்கள் அடிசாய்ந்து தலைகீழாகும்
பண்ணாத தவறுகளைச் செய்யத் தூண்டும்
பாபத்தின் அடிசேர்க்கும் பண்பு நீங்கும்

ஆசைகளை வேலியிட்டுத் தடுக்காவிட்டால்
அனர்த்தம் தான்பிறர் சுகத்தைச் சூறையாடும்
யோசனையே மிகுந்துவிடும் மனுப் படைப்பின்
நோக்கங்கள் கெட்டுவிடும் நொந்தவர்க்கு
நேசத்தைக் காட்டியவர்க்;குதவி செய்யும்
நினைவெல்லாம் அகன்றுவிடும் நிஸ்டூரமாய்
பாசமற்று மனுக் குலத்தோர் அரக்கராகிப்
பரதவிக்கும் ஓர் காலம் வந்தேதீரும்.

Tuesday, August 07, 2012

பல்துறை கலைஞராக விளங்கிய திரு.வே.மகாலிங்கம்


எண்ணூறு வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றுப் பெருமையுடையது தம்பலகாமம். தொல் பொருள் திணைக்களத்தால் “மைப்படி” எடுக்கப்பட்டுள்ள 13ஆம் நூற்றாண்டுக்குரியதான தம்பலகாமத்துக் கல்வெட்டால் இதனை நாம் அறியக் கூடியதாக உள்ளது. அத்தகைய சிறப்பு வாய்ந்த தம்பலகாமத்தில் பழமையில் சங்கீதத் கலையும் ஆயுள் வேத வைத்தியக் கலையும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து வளர்ந்தோங்கி வந்தன.

Sunday, August 05, 2012

நல்லூர் பதியில் உறைகின்ற நாதனே உந்தன் தாள் போற்றி


கல்விச் சிறப்பால் மிக உயர்ந்து
கலைகள் வளரும் யாழ்ப்பாண
நல்லூர்ப் பதியில் உறைகின்ற
ஞானக் கொழுந்தே அடியார்கள்
அல்லல் போக்கி அருள் சுரக்கும்
நல்ல புகழை எடுத்தோத
நாவிற் கருள்வாய் விநாயகனே.

குன்று தோறும் விளையாடும்
குமரா அமரர் குறை தீர்க்க
சென்று அமரர் செருக்கழித்த
செவ்வேள் என்னும் திறலோனே!
மன்றுள் ஆடும் மகாதேவர்
மனதைக் கவரும் பேரழகா
என்று என்றன் துயர் போக்கி
இன்பம் அருள்வாய் இறையோனே.

Thursday, August 02, 2012

கலாபூசணம் ‘லய ஞான மணி’ திரு.கோ.சண்முகராசா

தம்பலகாமம்
தம்பலகாமம் பட்டிமேட்டில் வாழ்ந்த கந்தப்பு கோணாமலை என்னும் பெரியார் வைராவியார் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர்களின் மூதாதையர்கள் குளக்கோட்டு மன்னனால் சோழநாட்டிலுள்ள மருங்கூர், காரைக்கால், திருநெல்வேலி போன்ற இடங்களிலிருந்து அழைத்து வரப்பட்டு இங்கு குடியேற்றப்பட்டவர்கள் என கோணேசர் கல்வெட்டின் மூலம் அறியக் கூடியதாக இருக்கின்றது.

பட்டி என்னும் சொல் முல்லை நிலங்களைக் குறிக்கும் என்பர் கற்றறிந்தோர். தமிழகத்தில் பாண்டிநாட்டிலேயே பட்டிகள் அதிகமாகக் காணப்படுகின்றது. ‘கோயிற்பட்டியை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

வரலாற்றுரீதியாக பட்டிமேடு தம்பலகாமத்தில் பேசப்பட்ட இடமாகும். 17ஆம் நூற்றாண்டுக்குரிய சித்திர வேலாயுத காதல் எழுதிய திரு.வீரகோன் முதலியார் பட்டிமேட்டில் வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில் பராபரிப்புக்காரர்களில் ஒருவராகிய திரு.கோபாலு கதிர்காமத்தம்பி (தோம்பர்) அவர்களும், வைராவியார் திரு.நடராசா அவர்களும் பட்டிமேட்டைச் சேர்ந்தவர்களே.

காளியப்பு முருகுப்பிள்ளை அண்ணாவியார்


எண்ணூறு வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றுச் சிறப்புடையது தம்பலகாமம். ஏறக்குறைய எண்ணூறு வருடங்களுக்கு முன்பு வணிகப் பெருநகராக தம்பலகாமம் விளங்கியிருக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் அபிப்பிராயப்படுகின்றனர். இதற்கு “தம்பலகாமம் கல்வெட்டு” சான்று பகருகின்றது.

இத்தகைய சிறப்புப் பெற்ற பெரு நகரில் ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தில் புகழோங்க வாழ்ந்தவர்தான் காளியப்பு முருகுப்பிள்ளை அண்ணாவியார்.

இசைமணி திரு.க.சண்முகலிங்கம்


இராகமாலிகா இசை நிகழ்ச்சி 
தம்பை நகர் தந்த புகழ் பூத்த கலைஞர்களில் ஒருவர் கணபதிப்பிள்ளை அண்ணாவியார் என்றால் அது மிகையாகாது. இராக, தாள நுட்பங்களை நன்கு அறிந்த இவர் ஒரு தலைசிறந்த ஆர்மோனிய வித்துவானுமாவார். திருகோணமலை மாவட்டத்தில் இரு கரங்களாலும் சரளமாக ஆர்மோனியம் வாசிப்பதில் இவருக்கு நிகர் வேறு எவருமில்லை என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகும். நாடகங்களை நெறிப்படுத்தி, தம்பலகாமம் கல்வி மேட்டிலுள்ள ஆலையடிப் பிள்ளையார் கோயில் முன்றலில் அரங்கேற்றி தம்பலகாமம் வாழ் மக்களை மகிழ்சிக் கடலில் ஆழ்த்தியவர். இவரது நாடகங்களைக் காண திருமலையிலிருந்தும், மாவட்டத்தின் சுற்றுப்புற கிராமங்களிலிருந்தும் ஏராளமான மக்கள் தம்பலகாமத்திற்கு வந்து செல்வது நாடறிந்த உன்மையாகும்.

கணபதிப்பிள்ளை அண்ணாவியாருக்கும் அவரது தர்மபத்தினி சிவகாமி அம்மையாருக்கும் ஐந்து பிள்ளைககள் மூவர் பெண்கள், இருவர் ஆண்கள். இவர்களில் 1936ஆம் ஆண்டு கார்த்திகை மாதம், 22ம் திகதி மகனாக பிறந்தவர்தான் நமது புகழ் பூத்த கலைஞர், பாடகர், கலா பூசணம,; கலைமணி,கந்தர்வகான இசைமணி திரு.க.சண்முகலிங்கம் அவர்கள். கணபதிப்பிள்ளை அண்ணாவியார் தனது மூத்த மகனான சண்முகலிங்கத்தை இளம் வயதிலிருந்தே தான் நெறிப்படுத்திய நாடக ஒத்திகைகளுக்கு அழைத்துச் சென்று கேட்போரைப் பரவசப் படுத்தும் வகையில் இராக தாள நுட்பங்களைக் கற்றுத் தந்து பாடுவதற்கான இசை ஆற்றலையும் உருவாக்கினார்.

எவ்வாறு அமைதி கொள்ளும் ?


அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம் 

பைந்தமிழ் மொழியில் வல்ல
பாவலா! தம்பை தந்த
செந்தமிழ் போற்றும் எங்கள்
தீந்தமிழ் கவிஞர் கோனே!
எந்தையே தமிழை உன்றன்
இறையெனப் போற்றி வாழ்ந்த
விந்தையை எண்ணி நாங்கள்

வியப்பினில் ஆழ்வதுண்டு

சிந்தனையைப் போற்றுவோம்


காக்கை ஒன்று மரத்திலே
முட்டை விட்டுக் காத்தது
பார்த்துப் பாம்பு ஒன்று வந்து
கொத்திக் குடித்துக் சென்றது.

கணினி

கணினி என்ற கருவி யொன்று
கருத்தில் தோன்றுதே இதைக்
கவனி என்று உலகம் இன்று
பரணி பாடுதே.

மனிதனும், மிருகமும்


உணவு தேடிக் காக்கையார்
ஊரைக் கூட்டி உண்ணுவார்
பணத்தைத் தேடி மனிதர் நாம்
பதுக்கி வைத்து வாழ்கிறோம்.

வாழ்வாங்கு வாழும் வழி


விடியற்காலை நாலு மணிக்கு
விழிக்க வேண்டும் தோழரே
கடிதிற் காலைக் கடன்கள் முடித்து
கடவுள் பாதம் தொழுவமே.

வேளை தோறும் பண்புகள்


பாலர் நாங்கள் கூடி நின்று
பாடிப் பாடி ஆடுவோம்
தோழர் ஒன்றாய்க் கூடுவோம்
சுறு சுறுப்பாய் ஓடுவோம்

உனக்குள் ஒன்றுண்டு



உனக்குள் ஒன்றுண்டு இதை
உணர்வாய் நீ நன்று
உனக்குள் உள்ள ஒன்றே இந்த
உலகில் எங்குமுண்டு

முழு மனிதராகுவோம்


இந்து, யேசு, புத்தர், என்று
எதற்குச் சண்டை தோழரே
இறைவன் ஒன்று என்னும் தீபம்
ஏற்ற வேண்டும் எங்குமே

வாழும் வழி தெரியணும்


ஆலமர நிழலிலே
அழகு மிகு பூனையார்
கோலமிடும் மங்கை போல்
குனிந்து நின்று முகர்ந்தனர்

விழாவும், பாராட்டும்... திருகோணமலை ஸ்ரீ கோணலிங்க மகாவித்தியாலயம்


இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் லிங்கநகர் பகுதியில் தி/ஸ்ரீ கோணலிங்க மகாவித்தியாலயம் அமைந்துள்ளது. நகரின் புறத்தே பெரும்பாலும் வசதிகுறைந்த மாணவர்கள் கல்விகற்கும் இப்பாடசாலை 1977 ஆம் ஆண்டு பிரம்ம ஞானி ஸ்ரீமத் சுவாமி கெங்காதரானந்தா மகராஜ் அவர்களின் ஆலோசனையின் பேரில் அமைக்கப்பட்டது.

கணிதம் கற்று உயர்வாய்…


கணக்கு வரா தென்று
கவலைப்படும் மகளே
கருத்து ஒன்று சொல்வேன் நீ
கவனமாகக் கேளு

ஆண்டவனைக் கண்டதுண்டா?


ஆண்டவனைக் கண்டதுண்டா?
அருமையண்ணா கேட்டனன்
ஆகா உண்டே என்று அவன்
அருமைத் தங்கை கூறினள்

கப்பல் துறை


கப்பல் துறை எங்கள் துறை
கன்னித் தமிழர் வாழ்ந்த துறை
கலம் செலுத்தி தமிழ் இளைஞர்
காவியம் படைத்த துறை

அன்பு


அன்பு செய்வோம் பிள்ளைகாள்
ஆகா ஓடி வாருங்கள்
அன்பு தெய்வ மாகுமே
அதனை அறிந்து போற்றுவோம்

எங்கள் ஊர்




தம்பை ஊர் எங்கள் ஊர்
தமிழர் ஒன்றாய் வாழும் ஊர்
தும்பை மலர் சூடும் கோணைத்
தூயவன் வாழ் தம்பை ஊர்

வளங் கொழிக்கும் எங்கள் ஊர்
வயல்கள் சூழ்ந்த தம்பை ஊர்
கந்தளைக் குளம் பாய்ச்சும்
கழனி சூழ்ந்த தம்பை ஊர்

ஆழ் கடலைப்பாருங்கோ


ஆழ் கடலைப்பாருங்கோ
ஆகா என்ன அழகிது
நீல நிறமானது
நீண்டு பரந்து தோன்றுது

வேதகால ஆசிரியர்களின் பத்துக் கட்டளைகள்


கல்வியை முடித்து வெளியேறும் மாணாக்கர்களுக்கு வேதகால ஆசிரியர்கள் பத்துக் கட்டளைகளை அறிவுறுத்தியுள்ளனர்.

தரணி போற்றச் செய்வோம்



அன்னை மொழியின் பெருமை நீ
அறிய வேண்டும் தம்பி
அன்னைத் தமிழைப் போற்றி நாம்
ஆட்சி அமைப்போம் தம்பி.

கீர்த்தி புகழ் தேடு


பாடு தம்பி பாடு
பைந்தமிழில் பாடு
வீடு செல்வம் வேண்டும்
வியர்வை சிந்தத்தேடு

உன்னால் முடியும் தம்பி



உன் னால் முடியும் தம்பி -நீ
உணர்ந்து கொள்ளு தம்பி
கண்போ லாகும் கல்வி-நீ
கற்று உயரு தம்பி

Wednesday, August 01, 2012

கற்று உயர்வு காண்பாய்


ஒன்று ஒன்று ஒன்று -இந்த
உலகில் தெய்வம் ஒன்று
ஒன்றும் ஒன்றும் இரண்டு-இந்த
உண்மை புரிந்து பாடு

வளங்கள் பெற்று மகிழலாம்


செல்வம் சேர்க்க வழிகளின்றித்
திரியும் எங்கள் தோழரே
செல்வம் சேர்க்கும் வழிகள் பல
செப்புகிறேன் கேளுங்கள்.

காந்தி


காந்தி எங்கள் காந்தியாம்
கருணை நிறைந்த காந்தியாம்
சாந்தி உலகில் தழைக்கவே
தன்னைத் தந்த காந்தியாம்

வள்ளுவர்


வள்ளுவராம் வள்ளுவர்
வான் புகழ் கொண்டவர்
தெள்ளு தமிழ் மொழியிலே
தீங் கவிதை தந்தவர்.

THAMPALAKAMAM PHOTOS




ஆதிகோணநாயகர் ஆலய பிரமோட்ஸப அபிஷேகம்



வரலாற்றுப்புகழ் மிக்க தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம் பாலஸ்தானம் செய்யப்பட்டுள்ள காரணத்தால் வருடாந்த பிரமோற்ஸபம் இம்முறை இடம் பெறவில்லை.

இதற்குப்பதிலாக பிரம்மோற்ஸப தினத்தை முன்னிட்டு ஆனிமாதம் 12ஆம் நாள் செவ்வாய்க்கிழமை 26.06.2012 தொடக்கம் 16.07.2012 திங்கட்கிழமை வரை 21 தினங்களுக்கு காலை 9.00 மணிமுதல் விஷேட அபிஷேக அலங்கார பூசை என்பன நடைபெறவுள்ளது.  தேர்த் திருவிழா தின அபிஷேகம் காலையிலும், கொடியிறக்க அபிஷேகம் மாலை 4.00 மணிக்கும் இடம் பெறும்.