Friday, March 05, 2010

வரலாற்றுத் திருகோணமலை


வரலாற்றுத் திருகோணமலை எனும் இந்நூல் திரு.கனகசபாபதி சரவணபவன் அவர்களால் எழுதப்பட்டது. பலசாசனங்களில் இருந்தும், வரலாற்று நூல்களில் இருந்தும் ஆதாரங்களைக்காட்டி எழுதப்பட்ட இந்நூல் திருகோணமலையின் வரலாற்றை போர்த்துக்கீசர் காலம்வரை ஆராய்கிறது.

இலங்கையில் திருமலைத்தமிழர் வரலாறு தொடர்பான ஆதாரங்களைப் பட்டியல்படுத்தும் இந்நூலில் திருகோணமலையின் வரலாற்றுடன் தொடர்புடைய தமிழக வரலாற்றுப் பின்னணிகள் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. திருகோணமலையின் வரலாறு, திருக்கோணேஸ்வரத்தின் தோற்றம், தென்னிந்திய அரசுகளின் எழுச்சி, குளக்கோட்டு மன்னன், திருகோணமலையில் வன்னியர்களின் ஆட்சி , திருகோணமலைச் சமூகங்களும்,தொல்மரபுகளும், வழமைகளும் என்று பல்வேறுபட்ட கோணங்களில் திருமலை வரலாற்றை ஆராய்கிறது இந்நூல்.

திருகோணமலை வரலாற்றுடன் திருகோணமலை மாவட்டத்தில் வாழும் இலங்கைத் தமிழர்கள், இந்தியத்தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லீம்கள், காப்பிரிகள்(நீக்கிரோக்கள்), பறங்கியர்கள், சீனர்கள், வனக்குறவர்கள் என்போரின் சமூக அமைப்புக்கள் பற்றியும் ஆராய்கிறது.

திருகோணமலை மாவட்டம் வன்னியர்கள் ஆட்டசிக்காலத்தில் திருகோணமலை, கட்டுக்குளப் பற்று , கொட்டியாரப் பற்று ,தம்பலகாமப் பற்று என நான்கு குறுநில ஆட்சிப் பிரிவுகளைக் கொண்டிருந்தமை பற்றிய விரிவான விளக்கத்தைத் தருகிறது இந்நூல். திருகோணமலையின் வரலாற்று ஆய்வு நூல்களைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்ளும் சாதாரண மக்களுக்கு இந்நூல் ஒரு வரப்பிரசாதமாகும்.
த.ஜீவராஜ்
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

4 comments:

  1. திருகோணமலை பற்றிய அரிய தகவல்களை தோண்டி எடுப்பதில், ஜீவநதி முக்கிய இடம் பெருகிறது,
    நன்றி ஜீவன் அண்ணா, திருகோண்மலை பற்றிய மேலும் உங்கள் பதிவுகள் வெளியிட வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. வாசித்து ரசித்தேன்.........


    திருகோணமலை பற்றிய பல விடையங்களை ஜீவநதி மூலம் அறிந்து கொண்டேன்.
    மேலும் பல தகவல்களை உங்களிடம் இருந்து எதிர்பார்கின்றேன்.
    நன்றி

    ReplyDelete
  3. கனகசபாபதி சரவணபவன் எழுதிய " காலனித்துவ திருகோணமலை" என்ணும் நூல் வெளிவந்துவிட்டதாக அறிகின்றேன். அது 'வரலாற்றுத் திருகோணமலை" நூலின் தொடர்ச்சி என நண்பர் ஒருவர் சொன்னார். அவருடைய ஆய்வுகள் மிக ஆழமான வரலாற்று உண்மைகளை வெளிக்கொண்டுவரக் கூடியது.
    வாசித்தவர்கள் விபரம் தெரிவித்தால் நன்று. எங்கே பெற்றுக்கொள்ள முடியும்?

    ReplyDelete
  4. Excellent beat ! I wish to apprentice while you amend your site, how can i subscribe for a blog web site?
    The account aided me a acceptable deal. I had
    been a little bit acquainted of this your broadcast provided bright clear idea

    ReplyDelete