Tuesday, February 02, 2010

சீதாஎலிய ஆலயம் - புகைப்படங்கள்

இலங்கையில் கடல் மட்டத்தில் இருந்து 1500 தொடக்கம் 8000 அடி உயரத்தில் அமைந்துள்ள மாவட்டம் நுவரெலியா. சிறிய இங்கிலாந்து என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்ட அழகிய நகரமான நுவரெலியாவில் இருந்து சுமார் 5km தூரத்தில் அமைந்திருக்கிறது சீதாஎலிய ஆலயம்.

இராமாயண இதிகாசத்துடன் தொடர்புகொண்டதாகக் காணப்படும் இந்த ஆலயம் சிறியதாக ,நேர்த்தியானதாக இருக்கிறது. உலகில் சீதைக்கென உள்ள தனியான ஆலயம் இதுவாகும். அசோகவனத்தில் சீதை சிறைப்பட்டிருந்தமை தொடர்பில் அமைக்கப்பட்ட ஆலயமாதலால் பெரிதாக திருவிழாக்கள் கொண்டாடப்படுவதில்லை. எனினும் இங்குள்ள உழைக்கும் மக்களால் ஆலயத்தில் தைப்பொங்கல்விழா ஒவ்வொரு வருடமும் சிறப்பிக்கப்படுகிறது என அறியமுடிகிறது.



இந்த இடத்தில் ஆலயம் அமையக்காரணமான புராணக்கதைதனை ஆலயச் சுவரிலுள்ள சித்திரங்கள் புரியவைக்கின்றன.
இவற்றோடு ஆலயத்தை ஒட்டி சலசலத்தோடும் சீதா அருவியும் , அதனருகில் இருக்கும் அனுமாரது பாதச்சுவடு உள்ளதாகக் கருதப்படும் இடமும்.
இலங்காபுரி மன்னனான இராவணனின் மாளிகைகளில் ஒன்று அமைந்திருந்ததாகக் கருதப்படும் மலைப்பிரதேசம்.
த.ஜீவராஜ்
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment:

  1. Dr.எம்.கே.முருகானந்தன் கூறியது...
    நானும் சென்ற வருடம் சென்றுள்ளேன். மிக அழகிய இடம். உங்கள் புகைப்படங்கள் சிறப்பாக உள்ளன. வாழ்த்துக்கள்.

    2 பிப்., 2010 10:30:00 pm
    PPattian : புபட்டியன் கூறியது...
    அழகான புகைப்படங்கள். நான் போனபோது, அந்த கோயிலின் பின்புறம் இருக்கும் சில மரங்களைக் காட்டி "அனுமான் வால் நெருப்பு பட்டு அந்த மரங்கள் கருத்து விட்டன. அங்கு முளைக்கும் எல்லா மரங்களும் கருப்பாகவே இருக்கும்" எனக் கூறப்பட்டது.

    மரங்கள் கருப்பாகத்தான் இருந்தன.

    2 பிப்., 2010 10:41:00 pm
    Ravimohan Ravimohan Vel கூறியது...
    அருமையான பதிவு ஜீவராஜ் .உங்கள் பணி தொடரட்டும்

    3 பிப்., 2010 5:38:00 am
    Vilvarajah கூறியது...
    நானும் சென்று பார்துள்ளேன்.அருமையான பதிவு ஜீவராஜ் அண்ணா

    3 பிப்., 2010 7:57:00 am
    Vilvarajah கூறியது...
    நானும் சென்று பார்துள்ளேன்.அருமையான பதிவு ஜீவராஜ் அண்ணா

    3 பிப்., 2010 7:57:00 am
    யோ வொய்ஸ் (யோகா) கூறியது...
    எங்களது ஊரை பற்றி எழுதியிருக்கிறீர்கள், வாழ்த்துக்ககள். கோவிலினுள்ளே புகைப்படம் எடுக்க விடமாட்டார்களே எப்படி எடுத்தீர்கள்?

    இராவணா எல்ல என்பது இப்பகுதியில் இல்லை, அது பண்டாரவளையிலிருந்து வெள்ளவாய செல்லும் வழியில் உள்ள ஒரு நீர் வீழ்ச்சி, அதைதான் இராவணா எல்ல என கூறுவார்கள்

    7 பிப்., 2010 10:48:00 pm
    யோ வொய்ஸ் (யோகா) கூறியது...
    எங்களது ஊரை பற்றி எழுதியிருக்கிறீர்கள், வாழ்த்துக்ககள். கோவிலினுள்ளே புகைப்படம் எடுக்க விடமாட்டார்களே எப்படி எடுத்தீர்கள்?

    இராவணா எல்ல என்பது இப்பகுதியில் இல்லை, அது பண்டாரவளையிலிருந்து வெள்ளவாய செல்லும் வழியில் உள்ள ஒரு நீர் வீழ்ச்சி, அதைதான் இராவணா எல்ல என கூறுவார்கள்

    7 பிப்., 2010 10:52:00 pm
    த.ஜீவராஜ் கூறியது...
    நன்றி Dr.எம்.கே.முருகானந்தன் அவர்களே

    18 பிப்., 2010 7:43:00 pm
    த.ஜீவராஜ் கூறியது...
    நன்றி PPattian : புபட்டியன் இப்போதும் அப்படியே கருதப்படுகிறது...

    18 பிப்., 2010 7:53:00 pm
    த.ஜீவராஜ் கூறியது...
    நன்றி திரு. Ravimohan Ravimohan Vel , Vilvarajah

    18 பிப்., 2010 7:54:00 pm
    த.ஜீவராஜ் கூறியது...
    நன்றி யோ வொய்ஸ் (யோகா) ஆலய நிர்வாகத்தின் அனுமதியுடனேயே புகைப்படம் எடுத்தேன். அவர்களிடமும் ,இணையத்திலும் இருந்து பெற்ற தகவல்களைக்கொண்டுதான் எழுதினேன். இங்குள்ள பல இடங்களின் வரலாறுபற்றிய ஆய்வுகள் நடத்தப்படாமல் இருப்பது வருத்தமே.

    27 பிப்., 2010 2:48:00 pm
    விஜி கூறியது...
    ஆலயத்தின் பெயரையே இப்போதுதான் அறிகின்றேன்.ஈழத்தில் இருக்கும் போது
    > கண்டி,நுவரெலியா, பதுளை,பண்டாரவளை இவற்றையெல்லாம் பார்க்கணும் என்கின்ற மிகுந்த
    > ஆசை இருந்தது. ஆனால்.!!! ம்ஹீம்.....இன்னும் நிறைவேறவில்லை அந்த ஆசையும்
    > இப்போது இல்லை.
    > தகவலுக்கு நன்றி ஜீவன்.

    27 பிப்., 2010 3:12:00 pm

    ReplyDelete