'கோணேசர் கல்வெட்டு' என்கின்ற இந்த வரலாற்று நூல், திருகோணமலையைச் சேர்ந்த கவிஞர் இராஜவரோதயம் அவர்களால் 16 ம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. இது பாடல்களையும் , உரைநடைப்பகுதிகளையும் கொண்டமைந்திருக்கிறது.
திருக்கோணேச்சர ஆலயத்துக்கு திருப்பணிகள் செய்த குளக்கோட்டு மன்னன், ஆலயம் பற்றியும், அதனை நிர்வகிப்பது பற்றியும்,கோயிற்தொழும்பாளர்கள் கடமைகள் பற்றிய செய்திகளையும் உள்ளடக்கி 'பெரியவளமை பத்ததி' என்னும் செப்பேட்டில் பொறித்து வைத்திருந்தார். அச்சாசன விடையங்களை அடிப்படையாக வைத்து அதைத் தொகுத்தும்,விரித்தும் கவி இராஜவரோதயரால் உருவாக்கப்பட்டதுதான் கோணேசர் கல்வெட்டு.
இந்நூல் மூலம் திருக்கோணேச்சரத்தின் வரலாறு, அவ்வாலயத்துக்கு குளக்கோட்டு மன்னன் செய்த திருப்பணிகள்,திருகோணமலை வன்னிமைகள் பற்றிய செய்திகள்,அக்காலத்து திருகோணமலைச் சமூகத்தின் பண்பாட்டு விழுமியங்கள் என்பனவற்றைப் பற்றி நாம் அறியக்கூடியதாக இருக்கிறது.
முக்கியமாக கோயில் தொழும்பு செய்வோர் பின்பற்றவேண்டிய விதிமுறைகள் ,அவர்களுக்கு வழங்கப்பட்ட மானியங்கள், கோணேசர் ஆலயத்துக்குரிய திரவிய இருப்பு என்பன பற்றி விரிவாகச் சொல்கிறது இந்நூல். திருகோணமலையின் வரலாற்றுத் தொன்மைக்கான ஆதாரங்களில் இந்நூல் முக்கிய இடம்வகிக்கிறது.
த.ஜீவராஜ்
பகுதி - 2 வாசிக்க... 'கோணமாமலை அமர்ந்தாரே' 2015 - புகைப்படங்கள்
பகிர்வுக்கு நன்றி..
ReplyDeleteஆக நல்லா தகவல்
ReplyDeleteஅடுத்த முறை மலைக்கு வரும் போது நுலகம் போகணும் .அங்க இருக்கும் தானே
தகவலுக்கு நன்றி அய்யா
ReplyDeleteஎமது சமய பாடத்தில் கொணேசர் கோயில் பற்றி படிச்சிருக்கன் அருமையான கோயிலும்
கூட
கோணேசர் ஆலயம். தேவாரப்பாடல் பெற்ற தலம்.*
ReplyDelete*என் பிறப்பிடமாக திருகோணமலை அமைந்தது ஒரு வரமே!..*
*இயற்கை சூழ்ந்த அந்தப்பகுதி பச்சைப்பசேல் எனும் மலை. துள்ளிக்குதித்து
மலையைத்தொட எத்தனிக்கும் அலை. இராவணன் வெட்டு, கோட்டை, துள்ளித்திரியும்
மான்கள், கையில் இருக்கும் வாழைப்பழத்தைப்பிடுங்கக் குறிபார்க்கும் குரங்குகள்.
அற்புதமான அமைதியான இயற்கைச்சூழலோடு இரண்டறக்கலந்த ஆலயம்.*
**
*அங்கு போவதென்றாலே பேரானந்தம் தான்.*
**
*தகவல் தந்தமைகு நன்றி ஜீவன்.*
முதல் தடவையாக இவ் வரலற்றுப் புத்தகத்தின் முகவுரையை கண்டுள்ளேன். நான் தற்போது வரலாறுகள் சார்பான தேடலில் உள்ளபடியால் இப் புத்தக அறிமுகம் பெரிதும் உதவிபுரியும் என்றே நம்புகின்றேன். நூலகம் வலைப்பக்கத்தில் இப் புத்தகத்தைத் தேடவுள்ளேன். கிடைக்காவிடில், நான் எங்கு இப் புத்தகத்தைப் பெற்று வாசிக்க முடியும் எனும் தகவலைத் தருகின்றீர்களா?
ReplyDeleteஆசிரியர்
மலைமுரசு
http://noolaham.org/
ReplyDeleteகோணேசர் கல்வெட்டு (6.69 MB) (PDF வடிவம்) -
Notes please
Deleteதிருக்கோணேச்சர ஆலய வரலாற்று ஆய்வு மையம்
ReplyDelete