வெள்ளைக்காரன் விலகிப்போனால்
விடிவு வரும் என்று
கொள்ளை ஆசை கொண்டிருந்தோர்
குடும்ப வாழ்க்கை இன்று
எள்ளளவும் உயர்வு இன்றி
இரந்து உண்ணும் நிலையில்
உள்ளனரே அவர்கள் வாழ்வை
உயரச் செய்ய வேண்டும்.
இந்த நாட்டு மன்ன ரென்ற
ஏற்றம் நமக்கிருந்தும்
சொந்த வீடு காணி இன்றிச்
சோற்றுக் கலைகின்றோம்
மந்திரிமார் மாறி மாறி
வந்து அரசாண்டும்
இந்த ஏழ்மை நிலைமறைய
என்ன செய்தார் அண்ணே