
இலங்கையில் இதுவரை (10.12.2009) நொவெல் இன்புளுவென்சா ஏ - எச் 1 என் 1 எனப்படும் வைரஸ் தொற்றுக்குள்ளாகி 23 பேர் மரணமடைந்துள்ளனர். 420 பேர் நோய்த்தொற்றுக்குள்ளாகி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.'
இது போன்ற செய்திகளை நாளும் நாம் கேட்டவண்ணம் இருக்கிறோம். எனவே இந்தத் தருணத்தில் இந்நோய் பற்றிய சிலவிடையங்களை நாம் அறிந்துகொள்வது முக்கியமானதாகும்.
இன்புளுவென்சா ஏ - எச் 1 என் 1 என்பது ஒருவகை வைரஸ். இது சுவாசத்தொகுதி மீது தாக்கத்தை ஏற்படுத்தி அதில் நோயை உண்டாக்கும் அதேவேளை , இலகுவில் ஒருவரில் இருந்து மற்றொருவருக்குத் தொற்றும் தன்மையையும் கொண்டதாக இருக்கிறது.
சாதாரண வைரஸ் காய்ச்சல் போல தானாகவே சில நாட்களால் மாறிவிடும் இந்தக்காய்ச்சல் பற்றி நாம் இத்தனைதூரம் கவலைப்பட இன்புளுவென்சா காய்ச்சலுக்கென்று ஒரு துயரவரலாறு இருப்பதுதான் காரணம்.
1918 இல் இன்புளுவென்சா காய்ச்சலுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படும் ஒரு அவசர வைத்தியசாலை ஒன்றையே நீங்கள் படத்தில் காண்கிறீர்கள். Spanish Flu என்று பெயரிடப்பட்ட இக்காய்ச்சல் உலகில் மிகப்பெரிய மனித அழிவு ஏற்படக் காரணமாக இருந்தது. சுமார் 40 மில்லியன் உயிரிழப்புகளுக்குக் காரணமாக அமைந்த இந்த நோய் பெருமளவில் 20 -50 வயதினரைத் தாக்கியது.இந்நோய்த் தாக்கத்தால் முதலாம் உலகப்போரில் பங்குகொண்ட பல படைவீரர்கள் மரணமானார்கள்.


இந்தப் புதுவகையான வைரஸ். பன்றிகளில் இன்புளுவென்சா காய்ச்சலை ஏற்படுத்துகின்ற வைரஸின் குண இயல்பையும், பறவைகளுக்கு இன்புளுவென்சா காய்ச்சலை ஏற்படுத்துகின்ற வைரஸின் பரம்பரை இயல்பையும் கொண்டிருப்பதோடு, மனிதனுக்கு சாதாரண சளிச்சுரத்தை ஏற்படுத்துகின்ற வைரஸின் பரம்பரை இயல்பையும் கொண்டிருக்கிறது.
இத்தகைய இயல்பு காரணமாக novel (never seen before) என்றழைக்கப்படும் இவ்வைரஸ் காய்ச்சல் பற்றிய போதிய அறிவு பொதுமக்களுக்குச் சென்றடையவேண்டிது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.
த.ஜீவராஜ்
பயனுள்ள பதிவு..
ReplyDelete