(கும்பம்)
விஜயதசமியன்று திருகோணமலையில் நடைபெறும் கும்பவிழா சிறப்பானதாகும்.அன்று இங்குள்ள ஆலயங்களில் கும்பங்கள் , கரகங்கள் அழகாக அலங்கரிக்கப்பட்டு அன்றிரவு முழுவதும் வீதிவலம் வருவது வழமையாகும்.
'கும்பம்' பெரிய செப்புக்குடத்தில் வேப்பம் பத்திரத்தினால் அகலமான அடித்தளம் அமைக்கப்பட்டு ,தேவையான உயரத்திற்குத் தேர்போல பூக்களாலும், வர்ணக்காகிதத்தாலும் அலங்கரித்துக் கட்டப்படுகிறது. கும்பத்தின் அடிப்பாகம் அகன்றும் மேலேசெல்லச்செல்ல ஒடுங்கியும் செல்லும்.
கும்பம், கரகம் என்பவற்றைத் தாங்கி வருபவர்களுடன் ராஜமேளம் அடிப்பவர்களும்,உடுக்கடித்து காவியங்கள் ,காவடிச் சிந்துகள் பாடுபவர்களும், பக்தர்களும் வருவார்கள்.
ஒவ்வொரு ஆலயங்களிலும் இருந்தும் புறப்படும் கும்பங்கள் மற்ற ஆலயங்களுக்குச் சென்று தரிசித்துவிட்டு புறப்பட்ட இடத்தைச் சென்றடைவதுடன் இவ்விழா நிறைவுபெறும். இதன்போது பக்கதர்கள் தம் வீட்டுவாசலில் நிறைகுடம் வைத்து கும்பத்தினை வரவேற்பர்.
த.ஜீவராஜ்
படங்கள் - (NOKIA N70)
28.09.2009
கும்பவிழா பற்றி படங்களுடன் அழகாக கூறியுள்ளீர்கள்.
ReplyDeleteஎங்கள் கிராமத்திலும் விஜயதசமி அன்று கரகாட்டம் நடைபெறுவது வழக்கம்.
சிறுவயதில் இரவு பத்து-பன்னிரண்டு மணிக்கு மேல் தூங்கி விழுந்தபடியே பார்த்து ரசித்ததுண்டு.
கரகாட்டக்காரர்களை சாட்டையால் அடிப்பதுதான் பயத்தைத் தரும்.
இக்கலைகள் அழியாது தொடர்ந்தும் நடை பெற்று வருவது மகிழ்ச்சி அளிக்கிறது்.
நானும் கேள்விப்பட்டேன் தம்பலகமத்தில் சிறப்பாக நடந்தது என்று சாமி ஆடினர்கலமே
ReplyDeleteஇரவிரவாக
கடவுள் தரிசனம் கிடைத்த திருப்தி
ReplyDeleteவாழ்த்துக்கள்
நன்றி மாதேவி அவர்களே
ReplyDeleteசெய்தித்தொகுப்பிற்கு நன்றி..:-)
ReplyDeleteஉண்மைதான் கவிக்கிழவன்
ReplyDeleteபணிகாரணமாக இந்தமுறை கும்பவிழாவை வீடியோ விபரணமாக்கும் என் ஆசை நிராசையானது...
அன்புள்ள ஜீவராஜ் அவர்களுக்கு ....
ReplyDeleteதங்களுடைய வலைப்பதிவில் கும்பம் தொடர்பான புகைப்பட தொகுப்பு என்னை தம்பலகாமம் நினைவுகளுகே கொண்டு சென்று விட்டது .
எனது வலைப்பதிவு www.eeleparavai.bolgspot.com
என்றும் அன்புடன் - சோ .ஜெயச்சந்திரன் ,தமிழ்நாடு ,இந்தியா