இன்று மிகுந்த மன உளைச்சல் நிறைந்த நாளாக இருந்தது. ஆர்வமில்லாமல் சோர்வுடன் மின்னஞ்ல்களைப் படித்துக்கொண்டிருந்தபோது நண்பர் முகமட் முனாஸினால் அனுப்பப்பட்டிருந்த NEVER LOSE HOPE எனத்தலைப்பிடப் பட்டிருந்த மின்னஞ்சல் படங்கள் மனதில் மீளப்புத்துணர்ச்சி ஊட்டியது.
படத்தில் இருப்பவரின் மகிழ்ச்சியும், தன்னம்பிக்கையும் நிறைந்த சந்தோசமான முகம் என் சோர்வுகளைக் கணநொடியில் நீக்கி பழையபடி உற்சாகமாக வேலைகளில் ஈடுபடத்தூண்டியது. அப்படங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். நண்பருக்கு நன்றிகள்.
பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஅருமையான தகவல் - உடலில் குறைபாடுகளுடன: தைரியத்துடன் அவர்கள் வாழ்க்கையை எதிர்நோக்குகிறார்கள்! ஆனால் நாம் மனக் குறைபாடுகளால் முடியாதவர்களாக நடிக்கிறோம்!
ReplyDeleteNEVER LOSE HOPE
ReplyDeleteஒரு கணம் எம்மைப்பற்றி யோசிக்கத்தோன்றுது.இருந்தும் இல்லாதிருப்பவர்கள் நாம்....
நன்றிகள். நண்பர் முஹமட் முனாஸிற்கும் அதனை எங்களுடன் பகிந்து கொண்ட உங்களிற்கும். சில நாட்களாக பல பிரச்சினைகள் ஏன் தான் இப்படி நடக்கின்றதோ எனத் தோன்றும் எவற்றிலும் சிந்தை செல்லாத ஏனோதானோ என்ற வாழ்க்கை. இந்தப் படங்களைப் பார்த்ததும் என்னை முற்றுமுழுதாகப் படைத்ததிற்கு இறைவனுக்கு நன்றி சொன்னேன். என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையை மீட்டுத் தந்தன இப்படங்கள்.
ReplyDeleteஇவரைப் போல் இன்னும் பலர் உலகில் வாழ்கிறார்கள்.வெல்கிறார்கள்.
ReplyDeleteஎங்கள் பதிவுலகில் கூடப் பலர் உள்ளார்கள்.ஆனால் பலருக்குத் தெரியாது.
ஆனால் எல்லாமுள்ள நாம்
வெட்கமாக உள்ளது.
விபரம் கிடைத்ததும் மற்றும் பலர்
பற்றிய தகவல் தருவேன்
ஆஸ்திரேலியாவினைப் பிறப்பிடமாகக் கொண்ட இவரது பெயர் நிக் (Nick Vujicic (04.12.1982)Melbourne,Australia). இவர் வர்த்தகத் துறையிலும் நிதித் துறையிலும் பட்டம் வாங்கியவர். மருத்துவர்களாலும் தீர்வு சொல்ல முடியாமல் போன நிக்கின் கதை சாதிக்க பிறந்த ஒவ்வொருவருக்கும் நல்ல உதாரணம். பிறக்கும் போதே கை கால்களற்றவராகப் பிறந்தவர் நிக். மருத்துவ ரீதியில் நிக்கின் பிறப்பிற்கான காரணம் இன்னும் மர்மமானதாகவே உள்ளது. ஆனாலும் அவருடைய சகோதரரும் சகோதரியும் ஆரோக்கியத்துடன் பிறந்தவர்கள்.
ReplyDelete''வாழ்க்கையில் அதிஷ்டம் என்று ஒன்றுமில்லை சந்தர்ப்பங்களும் எதிர்பாரா நிகழ்வுகளும்தான்
மோசமான விடயங்களை தீர்மானிக்கின்றன. கடவுள் நம் வாழ்க்கையில எதையும் தப்பாகக் கொடுக்க மாட்டார் ஏதாவது காரணத்தோடு தான் எதையும் செய்வார். எனக்கு இப்போது 23 வயது. வர்த்தகத்துறையிலும் நிதித்துறையிலும் பட்டம் வாங்கினாலும் சமூகத்திற்கு சிந்தனை சொல்லும் பேச்சாளராக இருப்பது தான் எனக்கு பிடிக்கும். மாணவர்களை சந்தித்து அவர்களை ஊக்கப்படுத்தி சவால்களை எதிர்கொள்ளும் மனவலிமையை உண்டு பண்ண வேண்டும்'' என்கிறார் நிக்.
நல்ல பேச்சாற்றலால் இளைஞர்களைக் கவர்ந்த நிக்கின் இலட்சியம் ஒரு புத்தகம் எழுதுவது. அந்தப் புத்தகம் இந்த வருட இறுதிக்குள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடவுளை மிஞ்சியவனும், கடவுளை மிஞ்சியதும் ஒன்றுமில்லை என்று சொல்லும் நிக் தான் கை கால்களற்றவன் என்று வருந்தப் போவதில்லை என்கிறார்
நன்றி ஹிஷாம்