
நுரையிரலில் தொற்று இருப்பின் நுரையீரல் காசநோய் என்றும்,நிணநீர்க் கணுக்கள் , எலும்புகள் ,மூட்டுக்கள் ,இனப்பெருக்க ,சிறுநீர்க் கால்வாய் ,மூளை மென்சவ்வு ,உணவுக்கால்வாய், நுரையீரலைச் சுற்றியுள்ள சவ்வு என்பதில் ஒன்றைக் காசநோய்க் கிருமி பாதித்திருந்தால் அது நுரையீரல் அல்லாத காசநோயாக கருதப்படுகிறது.


எப்போதும் நமக்கோ அல்லது நம்மைச் சார்ந்தவர்களுக்கோ நோய்வருமென்று அறிந்தால் மட்டுமே அதுபற்றி கவனமெடுக்கும் நாம் இந்நோய் பற்றி ஏன் அறிந்துகொள்ள வேண்டும்...
உலக சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் காசநோய் தொற்றுடையவர்களாக இருக்கின்றனர். இந்த வட்டத்துள் நாமும் இருக்கலாம். ஏனெனில் காசநோய் கண்ட (நுரையீரல் காசநோய்) நபரிலிருந்து சளியுடன் வெளியேறும் கிருமி காற்றின் மூலம் மற்ற நபர்களுக்கு பரவுகிறது. இந்நோய் கண்ட நபர் மூலம், ஒரு வருடத்தில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட நபருக்கு இந்நோய் தொற்றும்.
கிழே உள்ள படம் வளர்முக நாடுகளிலேயே அதிகமாக காசநோயாளிகள் இருப்பதைக் காட்டுகிறது. வளர்முக நாடுகளில் வருடாந்தம் இரண்டு மில்லியன் மக்கள் மரணிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
எனவே மூன்று வாரங்களுக்கு மேல் தொடரும் இருமலுடன் பின்வரும் அறிகுறிகளில் ஒன்று அல்லது பல
- நிறைகுறைதல்
- களைப்பு
- காச்சல் குறிப்பாக மாலை நேரங்களில்
- மார்பு வலி
- குறுஞ்சுவாசம்
- உணவில் விருப்பமின்மை
- இருமலின் போது இரத்தம் வெளியேறுதல்
தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையை நாடவேண்டும். அத்துடன் முறையான சிகிச்சையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
முறையான மருத்துவம் மூலம் பூரணமாக குணப்படுத்தக் கூடிய இந்நோயுடைய நோயாளி ஒருவர் தகுந்த சிகிச்சை எடுக்காமலிருப்பது பாரதூரமான குற்றமாகும். ஏனெனில் அவர் தான் மட்டுமல்லாமல் தன் குடும்பத்தினருக்கும் , வேலைத்தள சக ஊழியர்களுக்கும் ,மற்றும் பலருக்கும் நோய்த்தொற்று ஏற்படக் காரணமாக அமைகிறார்.


Tuberculosis is back
இந்நோய்பற்றி அறிந்துள்ள அனைவரும் மற்றவர்களுக்கு இந்நோய்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கடப்பாடு உடையவர்களாக இருக்கிறோம். ஏனெனில் அது தொற்றும் அபாயத்தில் நாமும் இருக்கிறோம்.
செய்தி - முறையான மருத்துவம் மூலம் பூரணமாக குணப்படுத்தக் கூடிய நோய் காச நோய் - TUBERCULOSIS.
ஒன்றிணைவோம்
முயல்வோம்
சாதிப்போம்
த.ஜீவராஜ்
மேலும் வாசிக்க
1. காச நோயற்ற உலகு..
2. கலவரம் தரும் நிலவரம் - காசநோய்(TUBERCULOSIS )
3. காச நோய் - சில உதவிக்குறிப்புக்கள்...
4. World TB Day / சர்வதேச காசநோய் தினம்
http://konjumkavithai.blogspot.com/2009/06/blog-post_14.html
ReplyDeleteyou may like this link anna
நன்றி மயாதி
ReplyDeleteநல்ல எச்சரிக்கை பதிவு
ReplyDeleteநோய் தடுப்பு முறை ஏதும் கிடையாதா ?
ஜீவன்..
ReplyDeleteஒரே விபூதியாக மணந்துகொண்டிருந்தது உங்களது பதிவில். இதுபொன்ற கட்டுரைகள் மீண்டும் வரவேண்டும்.
சில தரவுகளையும் இணைத்துக்கொள்ளுங்கள். இலங்கையில் இதன் பாதிப்பு காசநோய் ஒழிப்புமையங்கள் அமைந்திருக்கும் இடங்கள்..
இல்லாவிடின் இவ்வாறான நல்ல பதிவுகளும் ஒரு முளுமையைத்தராமலே மறைந்து விடும்
////நோய் தடுப்பு முறை , இலங்கையில் இதன் பாதிப்பு காசநோய் ஒழிப்புமையங்கள் அமைந்திருக்கும் இடங்கள்..///
ReplyDeleteவரும் நாட்களில் பதிவேற்ற இருக்கிறேன்..
நன்றி யூர்கன் க்ருகியர்.....
ReplyDeleteநன்றி cherankrish
ReplyDeleteசிறப்பான பதிவு. பலருக்கும் உதவும்.
ReplyDeleteநன்றி டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
ReplyDeleteஅவர்களே