நிலவொளியில் நீயும், நானும்
சேர்ந்து நடக்கையில் - இது
கனவுதேசம் என்றலவோ
கருதத் தோன்றுது
பசுந்தறையில் அமர்ந்து நீயும்
பாட்டுப்பாடையில் - சுற்றி
மரத்தில் இருந்து
ரசிக்கிறது குயிலினங்களே
பனி விழும் பாதைதனில்
பயணம் செல்கையில் - நீ
இறுக்கிப் பிடித்த கைவழியே
என்னிதயம் உறையுதே
உரசிச்செல்லும் உந்தன்விழி
தீயை மூட்டுதே - அதிலென்
உணர்வுங் கொஞ்சம்
கள்ளமாக குளிர்காயுதே
புரியவில்லை இந்த சுகம்
புதுமையானதே - என்றும்
புரிந்து கொண்டு
வாழ்ந்துகொண்டால் சொர்க்கமானதே
த.ஜீவராஜ்
அருமை, பகிர்விற்க்கு நன்றி பாஸ்!!
ReplyDelete:-?
ReplyDeleteகவிதை நன்றாக உள்ளது அண்ணா.
ReplyDeleteநன்றி வம்பு விஜய்
ReplyDeleteநன்றி கலையரசன்
ReplyDeletence lyrics sir.... :)
ReplyDeleteநல்ல கவிதை.
ReplyDelete"..உரசிச்செல்லும் உந்தன்விழி
தீயை மூட்டுதே - அதிலென்
உணர்வுங் கொஞ்சம்.."
மனசோடு பேசும் வார்த்தைகள்
""அதிலென்
ReplyDeleteஉணர்வுங் கொஞ்சம்
கள்ளமாக குளிர்காயுதே
புரியவில்லை இந்த சுகம்
புதுமையானதே - என்றும்
புரிந்து கொண்டு
வாழ்ந்துகொண்டால் சொர்க்கமானதே""
உங்கள் கவிவரிகள் உண்மை உணர்வுகளின் ஆழம்
உங்களை வாழ்த்தும் அளவுக்கு நானில்லை
என்றாலும் உங்கள் கவி ரசித்தவனாக வாழ்த்துகின்றேன்
அன்புடன் கரவைக்குரல்
நன்றி யாழினி
ReplyDeleteகவிதை வரிகள் இனிமையாக இருக்கின்றன; ஆனால் எமது தேசத்தில் இனிமேல் இந்த வகையான பசுமையான இடங்களும், இனிமையாக சுதந்திரமாக காதலுடன் நடமாட மனங்களும் கிடைக்குமா? என்று ஏக்கத்துடன் நினைத்துப் பார்க்கிறேன்.
ReplyDeleteநன்றி Lavasuthan Sivalingam
ReplyDeleteநன்றி டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
ReplyDeleteஅவர்களே
"புரியவில்லை இந்த சுகம்
ReplyDeleteபுதுமையானதே - என்றும்
புரிந்து கொண்டு
வாழ்ந்துகொண்டால் சொர்க்கமானதே"
கனவுகள் நிஜமாக வாழ்த்துக்கள்
நன்றி கரவைக்குரல்
ReplyDeleteஉங்கள் அன்பிற்கு
/// எமது தேசத்தில் இனிமேல் இந்த வகையான பசுமையான இடங்களும், இனிமையாக சுதந்திரமாக காதலுடன் நடமாட மனங்களும் கிடைக்குமா? என்று ஏக்கத்துடன் நினைத்துப் பார்க்கிறேன்.///
ReplyDeleteகனவுதேசம்
நன்றி Swathi Swamy அவர்களே
நன்றி Renuka Srinivasan
ReplyDeleteஅட, கவிதை :)
ReplyDelete