Monday, June 22, 2009

கலங்குகின்றோம் கண்பாருங்கள்.....

இனிதே களிக்கும் முதுமைக் காலம்
இழந்து தவிக்கும் எங்கள் நிலை
கடைசி வரைக்கும் புரியுதில்லை
கஷ்டப்பட்டு வளர்த்த பிள்ளை

பேரர்களைப் பிரிந்து வாழும்
வாழ்வுமது பிடிக்கவில்லை
வீட்டைப் பிரிந்து முதியோர் இல்ல
வாழ்க்கையது ருசிக்கவில்லை

திட்டக்கூட மனசு வரலை
தேடிப்போக வழியுமில்லை
பட்ட துன்பம் நினைவில் வந்து
படுத்தும் பாடு கொஞ்சமில்லை

எட்ட நின்று பார்த்தால் போதும்
ஏந்திழையாள் கெஞ்சுகின்றாள்
பேசுதலே சிறுமையென்று
பெற்ற பிள்ளை கலங்குகின்றான்

இத்தனைக்கும் செய்த பாவம்
என்னவென்று புரியவில்லை
பித்தனைப்போல் பிதற்றுகின்றேன்
பேச்சிழந்து தவிக்கின்றேன்.

இச்சகத்தில் உள்ள இன்பம் -எமக்
அத்தனையும் தேவையில்லை
கடைசி நேர வாழ்க்கைக்காக
கலங்குகின்றோம் கண்பாருங்கள்

த.ஜீவராஜ்

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

15 comments:

  1. இச்சகத்தில் உள்ள இன்பம் -எமக்
    அத்தனையும் தேவையில்லை
    கடைசி நேர வாழ்க்கைக்காக
    கலங்குகின்றோம் கண்பாருங்கள்



    Supper

    ReplyDelete
  2. நன்றி கவிக்கிழவன் அவர்களே

    ReplyDelete
  3. உண்மையின் வரிகள்
    வலிக்கின்றன

    ReplyDelete
  4. நன்றி திகழ்மிளிர்

    ReplyDelete
  5. பெற்றோர்களைப் பாரமாக நினைத்து முதியோர் இல்லங்களில் கொண்டு போய் விடும் பிள்ளைகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டு வரும் காலமிது. எம்மை வளர்த்து ஆளாக்க அவர்கள் எவ்வளவு சிரமப் பட்டிருப்பார்கள் என்று நாம் சிந்திப்போமாயின் அவர்களிற்கு இந் நிலை வராது. நாம் எம் பெற்றோருக்குச் செய்வதைத் தான் நாளை எமது பிள்ளைகளும் எமக்குச் செய்வார்கள்.

    ReplyDelete
  6. மனதைத் தொட்டது....த.ஜீவராஜ்

    ReplyDelete
  7. படமும் அதற்க்கு விளக்கமும் அருமை

    ReplyDelete
  8. நன்றி Renuka Srinivasan
    உங்கள் கருத்துரைக்கு

    ReplyDelete
  9. நன்றி அன்புடன் அருணா அவர்களே

    ReplyDelete
  10. மிகவும் அருமையான கவிதை.

    ReplyDelete
  11. நன்று நண்பனே

    ReplyDelete
  12. நன்றி அமுதன்

    ReplyDelete
  13. நன்றி prem அவர்களே

    ReplyDelete
  14. நல்ல கருத்துள்ள கவிதை, ஏனியை எட்டி உதைக்கும் உதவாக்கரைகள் காதில் எட்டட்டும்.

    ReplyDelete
  15. நன்றி

    @ கிரி
    @ ஷ‌ஃபிக்ஸ்

    ReplyDelete