பாம்புக்கடி - NEGLECTED TROPICAL DISEASE என்னும் பதிவிற்கு மருத்துவர் RENUKA SRINIVASAN (UNIVERSITY OF EAST LONDON ) அவர்கள் எழுதிய மறுமொழியுடன் கூடிய உதவிக்குறிப்பு இங்கு பகிர்தலுக்காக பதிவாக்கப்பட்டுள்ளது.
ஆதியில் வாயுதேவனால் பறித்து வீசப்பட்ட கைலைமலைச் சிகரங்களில் ஒன்றே திருக்கோணமலை என்பதை வரராமதேவ சோழன் அறிந்தான். இம் மன்னன் முக்கிய கட்டிடப் பொருள்களுடன் சோழநாட்டில் இருந்து திருக்கோணமலை வந்து, தங்கி, சுவாமி மலையில் கோணேஸ்வர ஆலயத்தை அமைத்து வழிபாடு நடைபெற எல்லா ஒழுங்குகளையும் செய்துவிட்டு அரசன் நாடு திரும்பினான். அரசனின் குமாரன் குளக்கோட்டன் தந்தையைப் போல் தானும் சிவாலயங்களை அமைக்க வேண்டும் என்ற மேலான எண்ணமுடையவன்.
தம்பன் கோட்டை வரலாறு சுவாரசியமானது. அறியப்பட வேண்டியது.
கலிங்கத்து விஜயபாகு கி.பி.1215 இல் இலங்கை மீது படையெடுத்து பொலன்னறுவையைக் கைப்பற்றி கி.பி. 1236 வரையிலும் இலங்கையை ஆட்சிசெய்தான் என்று சரித்திரம் கூறுகிறது. இலங்கையை ஆண்ட கலிங்க மன்னர்கள், இங்குள்ள பௌத்தர்களைத் திருப்திப்படுத்தி ஆட்சியில் நீடிக்க பௌத்த மதத்தைத் தழுவி பௌத்த மன்னர்களாகவே ஆட்சி செய்தனர்.
இலங்கையில் வருடமொன்றுக்கு 600 க்கு மேற்பட்டோரைப் பலியெடுக்கும் ஒரு துர்நிகழ்வாக விசப்பாம்புக்கடி இருக்கிறது. இந்தியாவில் ஆண்டுக்கு 11,000 மரணங்களும் , தெற்காசியாவில் 14,000 மரணங்களும் , உலகில் ஆண்டொன்றுக்கு 94,000 மரணங்களும் பாம்புக்கடியால் நிகழ்வதாக தெரிவிக்கப்படுகிறது.
எத்தனை சுலபமாகச் சொல்லிவிட முடிகிறது இவன்/இவள் அனாதை என்று. யாரும் உறவென்றில்லாத உலகை கணநேரம் கற்பனை செய்து பார்க்கவே நெஞ்சுறைந்து போய்விடுகிறது நமக்கு.
தனித்துப் போனவர்களின் துயரம் அவர்களோடு இணைந்திருக்கையில் மட்டுமே நம்மால் உணரப்படுகிறது. விலகிவந்தபின் நம் வேலைகளுக்குள், வீட்டுப் பிரச்சனைகளுக்குள் சுலபமாக அவர்தம் நினைவுகளைத் தொலைத்துவிடுகிறோம்.
காசநோய்க்கிருமி தொற்றி நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் காசநோயாளிகளாக இனங்காணப்படுகின்றனர்.
நுரையிரலில் தொற்று இருப்பின் நுரையீரல் காசநோய் என்றும்,நிணநீர்க் கணுக்கள் , எலும்புகள் ,மூட்டுக்கள் ,இனப்பெருக்க ,சிறுநீர்க் கால்வாய் ,மூளை மென்சவ்வு ,உணவுக்கால்வாய், நுரையீரலைச் சுற்றியுள்ள சவ்வு என்பதில் ஒன்றைக் காசநோய்க் கிருமி பாதித்திருந்தால் அது நுரையீரல் அல்லாத காசநோயாக கருதப்படுகிறது.
இடிக்கப்படத் தயாராக இருக்கிறது அந்தப் பழைய கட்டடம். பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் பல கட்டங்களில் இருந்து ஒதுங்கி தனித்திருக்கிறது அது.
பலமுறை அதனைச் சுற்றிச் சுற்றி வந்தேன்.மிகச் சிறிய வகுப்பறை. முதன் முறையாக எனக்குத் தெரிந்த வெளியுலகம் இவ்வளவு சிறியதாக இருப்பதை என்னால் நம்ப முடியவில்லை.